சாதிய கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆக.9-ல் போராட்டம்: திருமாவளவன் தகவல்

சாதிய கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆக.9-ல் போராட்டம்: திருமாவளவன் தகவல்
Updated on
1 min read

சென்னை: ​சா​திய கொலைகளுக்கு எதி​ராக சட்​ட​மியற்ற வலி​யுறுத்தி வரும் 9-ம் தேதி போராட்​டம் நடத்​தப்​படும் என்று விசிக தலை​வர் திரு​மாவளவன் கூறி​னார். சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அண்​மை​யில் ஆந்​திர பிரதேசம் மதனபள்​ளி​யில் விசிக மாநில பொதுச்​செய​லா​ளர் சிவபிர​சாத் பராமரித்து வரும் புத்​தர்சிலை உடைக்​கப்​பட்​டது.

இதற்கு காரண​மானவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​க கோரி உண்​ணா​விரதம் இருந்த சிவபிர​சாத் மீது அடுக்​கடுக்​கான பொய் வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன. பாஜக​வுடன் தெலுங்கு தேசம் கைகோர்த்த பிறகு, காவல், வரு​வாய்த் துறை அதி​காரி​கள் சங்​பரி​வார்​களின் தொண்​டர்​களாக மாறி​விட்​டார்​கள்.

இதை விசிக வன்​மை​யாக கண்​டிக்​கிறது. ஆந்​திர பிரதேசத்தை மெல்ல மெல்ல சங்​கி​களின் பிரதேச​மாக மாற்றி வரு​கிறார்​கள். சிவபிர​சாத் மீது போடப்​பட்ட வழக்​கு​களை திரும்​பப் பெற வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, விஜயவாடா​வில் ஆக. 23-ம் தேதி எனது தலை​மை​யில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெறுகிறது.

பிஹாரில் நடை​முறைப்​படுத்​தப்​பட்​டுள்ள தீவிர சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்தை தமிழகத்​தி​லும் அமல்​படுத்த திட்​ட மிடப்​பட்​டிருப்​ப​தாகத் தெரி​கிறது. இதுகுறித்து விரி​வாக விவா​திக்க, தமிழக முதல்​வர் அனைத்து கட்​சிக் கூட்​டத்தை கூட்ட வேண்டும்.

மாலே​கான் குண்​டு​வெடிப்​பில் குற்​றம்​சாட்​டப்​பட்ட 7 பேர் விடு​தலை செய்​யப்​பட்​டிருக்​கின்​றனர். என்ஐஏ அதி​காரி​களுக்கு அமித்ஷா மறை​முக நெருக்​கடியை தந்​திருக்​கிறார். தமிழகத்தை சனாதனமயப்​படுத்த பாஜக துடிக்​கிறது. இங்​குள்ளகட்​சிகளு​ட​னும், சாதிய மதவாத அமைப்​பு​களு​ட​னும் பாஜக இணைந்து செயல்​படத் தொடங்​கிய பிறகு​தான், சாதி​யின் பெயரில் வன்​முறை​கள், கொலைகள் அதி​கரித்​திருக்​கின்​றன.

சாதிய கொலைகளை தடுப்​ப​தற்​கான சட்​டம் இயற்ற பாஜக ஆர்​வம் காட்​ட​வில்​லை. ஐ.டி. ஊழியர் கொலைக்கு பாஜக, ஆர்​எஸ் எஸ் கண்​டனம் தெரிவிக்​க​வில்​லை. தமிழக அரசு எச்​சரிக்​கை​யாக இருந்​து, வெறுப்பு அரசி​யலை பரவ​வி​டா​மல் தடுக்க வேண்டும்.

சாதிய கொலைகள் தடுப்​புச் சட்​டத்தை நிறைவேற்ற வலி​யுறுத்தி மாநிலம் தழு​விய அளவில் வரும் 9-ம் தேதி ஆர்ப்​பாட்டம் நடை​பெறும். சென்​னை​யில் எனது தலை​மை​யில் ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​படும். திமுக தேர்​தல் வாக்​குறு​திப்​படி இச்​சட்​டத்தை நிறைவேற்ற வேண்​டும்.

திமுக கூட்​டணி பலவீன​மாக இருப்​ப​தால், மேலும் சில கட்​சிகளுக்கு அழைப்பு விடுப்​ப​தாக கூறு​வதை ஏற்க முடி​யாது. அதே​நேரம், ஓபிஎஸ், தேமு​திக கூட்​ட​ணிக்கு வந்​தால், இணைந்து பயணிப்​ப​தில்​ சிக்​கல்​ இல்​லை. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in