சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக? - முதல்வருடனான சந்திப்பு குறித்து பிரேமலதா விளக்கம்

சென்னை முகாம் அலுவலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். சந்திப்பின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சென்னை முகாம் அலுவலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். சந்திப்பின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Updated on
2 min read

சென்னை: ​முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை, தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா நேற்று திடீரென சந்​தித்து பேசி​யது அரசி​யல் வட்​டாரங்​களில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தமிழகத்​தில் கடந்த மக்​கள​வைத் தேர்​தலின்​போது அதி​முக கூட்​ட​ணி​யில் தேமு​திக இடம் பெற்​றிருந்​தது. அந்​தக் கூட்​ட​ணி​யில் தேமு​தி​க​வுக்கு 5 இடங்​கள் வழங்​கப்​பட்​டன. இதுத​விர ஒரு மாநிலங்​களவை இடமும் வழங்​கப்​படு​வ​தாக தேமு​தி​க​வுக்கு உறுதி அளிக்​கப்​பட்​டது.

ஆனால், கூட்​டணி ஒப்​பந்​தத்​தின்​படி தேமு​தி​க​வுக்கு மாநிலங்​களவை இடத்தை அதி​முக வழங்​க​வில்​லை. மாறாக அடுத்​தாண்டு நடை​பெறவுள்ள தேர்​தலில் இடம் வழங்​கு​வ​தாக அதி​முக அறி​வித்​தது. இதனால் தேமு​திக தரப்​பினர் அதிருப்தி அடைந்​தனர். அதைத்​தொடர்ந்​து, கூட்​டணி நிலைப்​பாட்டை ஜனவரி​யில் அறி​விப்​போம் என்று தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் அறி​வித்​தார். இதன்​மூலம் அதி​முக கூட்​ட​ணி​யில் நீடிக்​க​வில்லை என்​பதை தேமு​திக சூசக​மாக தெரி​வித்​தது.

அதன்​பின் திமுக, தவெக கட்​சிகளு​டன் தேமு​திக தரப்​பில் கூட்​டணி பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்டு வரு​வ​தாக தகவல்​கள் வெளியாகின. இந்​நிலை​யில் திமுக தலை​வரும், முதல்​வரு​மான மு.க. ஸ்டா​லினை சென்​னை​யில் உள்ள அவரது இல்​லத்​தில் பிரேமலதா விஜய​காந்த் நேற்று சந்​தித்து நலம் விசா​ரித்​தார். அப்​போது துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், தேமு​திக பொருளாளர் எல்​.கே.சுதீஷ் உள்​ளிட்​டோர் உடனிருந்தனர்.

திமுக​வுடன் கூட்​ட​ணி? - பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் பிரேமலதா கூறிய​தாவது: எனது திரு​மணம் கருணாநிதி தலை​மை​யில்​தான் நடை​பெற்​றது. விஜய​காந்​துக்​கும், கருணாநி​திக்​கும் 45 ஆண்​டு​கால நட்பு இருந்​தது. அதே​போல், முதல்​வர் மு.க. ஸ்​டா​லினும், விஜய​காந்​துடன் நட்​பில் இருந்​தார். விஜய​காந்​துக்கு உடல்​நிலை சரி​யில்​லாத நேரத்​தில் நலம் விசா​ரித்​தார். தற்​போது அவருக்கு உடல்​நிலை சரி​யில்லை என்​ப​தால் நட்​புரீ​தி​யாக சந்​தித்து நலம் விசா​ரித்​தோம். நன்​றாக இருப்​ப​தாக கூறி​னார். விரை​வில் குணமடைய வேண்​டுமென அவருக்கு வாழ்த்து கூறி​விட்டு வந்​தோம்.

இந்த சந்​திப்பு 100 சதவீதம் மரி​யாதை நிமித்​த​மானது. அவர்​கள் எங்​கள் குடும்​பத்​தின் மீது வைத்த பற்​றும், நாங்​கள் அவர்​கள் குடும்​பத்​தின் மீது வைத்​துள்ள பற்​றின் வெளிப்​பாடு​தான் இந்த சந்​திப்​பு. தேமு​தி​க​வின் வளர்ச்​சி​யில் நாங்​கள் தற்​போது முழு கவனத்தை செலுத்தி வரு​கிறோம். தமிழகம் முழு​வதும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள இருக்​கிறேன். கூட்டணி குறித்து தற்​போது எது​வும் சொல்ல முடி​யாது. அதற்​கான நேரம் வரும் ​போது உங்​களிடம் அறி​விப்​போம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

முன்னோட்டமாக சந்திப்பு... இதற்​கிடையே, சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், திமுக கூட்​ட​ணி​யில் சேர தேமு​திக முயற்​சித்து வருவதாக​வும், அதற்கு முன்​னோட்​ட​மாக முதல்​வர் ஸ்டா​லினை சந்​தித்து தங்​கள் விருப்​பத்தை பிரேமலதா விஜய​காந்த் தெரிவித்தாக​வும், அதற்கு முதல்​வர் ஸ்டா​லின் பச்​சைக்​கொடி காட்​டி​யுள்​ள​தாக​வும் கூறப்​படு​கிறது. இரட்டை இலக்​கத்​தில் சட்​டப்​பேரவை இடங்​கள் மற்​றும் ஒரு மாநிலங்​களவை இடம் ஒதுக்க தேமு​திக கோரிக்கை வைத்​துள்​ள​தாக​வும்​ அரசி​யல்​ வட்டாரங்களில்​ பேசப்​படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in