சவுக்கு சங்கர் மீதான வழக்கை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சவுக்கு சங்கர் மீதான வழக்கை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: சவுக்கு சங்​கர் மீதான வழக்கை 6 மாதங்​களுக்​குள் விசா​ரித்து முடிக்க வேண்​டும் என விசா​ரணை நீதி​மன்​றங்​களுக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தன்​னுடைய யூடியூப் சேனல் செயல்பட காவல் ஆணை​யர் அருண் தடை​யாக இருப்ப​தாக கூறி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் சவுக்கு சங்​கர் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி பி.வேல்​முருகன் முன்பு விசா​ரணைக்கு வந்​த​போது, “கருத்து சுதந்​திரத்தை நல்ல நோக்​கத்துக்காகவே பயன்​படுத்த வேண்​டுமே தவிர அதை மிரட்​டும் நோக்​கில் பயன்​படுத்த கூடாது. வழக்கு நீதி​மன்ற விசா​ரணை​யில் உள்​ள​போது ஊடக விசா​ரணை மேற்​கொள்​வது சரி​யானது அல்ல. இது தொடர்​பாக சவுக்கு சங்​கருக்கு உரிய அறி​வுரையை அவர்தரப்பு வழக்​கறிஞர் வழங்க வேண்​டும்.

சவுக்கு சங்​கர் மீது நிலு​வை​யில் உள்ள குற்ற வழக்​கு​கள் விவரங்​களை தமிழக உள்​துறை செயலர், டிஜிபி, சென்னை காவல் ​துறை ஆணை​யர் தாக்​கல் செய்ய வேண்​டும்” என உத்​தர​விட்​டிருந்​தார். இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது காவல்​துறை தரப்​பில் அறிக்கை தாக்​கல் செய்​யப்​பட்​டது. அதில், “சவுக்கு சங்​கருக்கு எதி​ராக 13 வழக்​கு​களின் விசாரணை நிலு​வை​யில் உள்​ளன. 24 வழக்​கு​களில் குற்​றப்​பத்​திரி​கைகள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வில், “சவுக்கு சங்​கர் மீது உள்ள அனைத்து வழக்​கு​களி​லும் 4 மாதத்​துக்​குள் குற்​றப்​பத்​திரிக்கை தாக்​கல்செய்து 6 மாதத்​தில் வழக்​கு​களை விசா​ரணை நீதி​மன்​றங்​கள் விசா​ரித்து முடிக்க வேண்​டும். சவுக்கு சங்​கர் கோரிக்கை டிஜிபி​யால் ஏற்​கெனவே பரிசீலித்து முடித்து வைக்​கப்​பட்​டுள்​ளது”எனக் கூறி வழக்​கை தள்​ளு​படி செய்​தார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in