மேட்டூர் அணையில் இருந்து 1.10 லட்சம் கனஅடி உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றில் ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளம்.
மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றில் ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளம்.
Updated on
1 min read

மேட்டூர் / தருமபுரி: மேட்​டூர் அணை நிரம்​பி​யுள்ள நிலை​யில், காவிரியில் விநாடிக்கு 1.10 லட்​சம் கனஅடி உபரிநீர் தொடர்ந்து திறக்​கப்பட்டுவருகிறது.

கர்​நாடக​ாவில் பெய்து வரும் மழை​யால் அங்​குள்ள கபினி, கேஆர்​எஸ் அணை​கள் நிரம்​பின. இதனால் காவிரி​யில் உபரிநீர் திறக்​கப்​பட்​டு, மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் 4 முறை நிரம்​பியது. தற்​போது அணைக்கு வரும் நீர் முழு​வதும் காவிரி​யில் வெளி​யேற்​றப்​படு​கிறது. மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் காலை 1 லட்​சத்து 500 கனஅடி​யாக​வும், இரவு 1,10,500 கனஅடி​யாக​வும் இருந்த நீர்​வரத்​து, நேற்று காலை​யும் அதே அளவு நீடித்​தது. அணையி​லிருந்து விநாடிக்கு 1.10 லட்​சம் கனஅடி தண்​ணீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. அணை மற்​றும் சுரங்க மின் நிலை​யம் வழி​யாக விநாடிக்கு 18,000 கனஅடி​யும், 16 கண் மதகு​கள் வழி​யாக 92,000 கனஅடி​யும் தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது.

கால்​வாய் பாசனத்​துக்கு விநாடிக்கு 500 கனஅடி திறக்​கப்​படு​கிறது. அணை​யின் நீர்​மட்​டம் நேற்று 120 அடி​யாக​வும், நீர்​இருப்பு 93.47 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது. அணைக்கு நீர்​வரத்து மேலும் அதி​கரிக்க வாய்ப்பு உள்​ள​தால், வெள்ள கட்​டுப்​பாட்டு மையத்​தில் நீரின் அளவை அதி​காரி​கள் கண்​காணித்தும், தேவைக்​கேற்ப நீரை வெளி​யேற்​றி​யும் வரு​கின்றனர். மேலும், வெள்ளம் தொடர்பாக காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள் ளது. வரு​வாய், தீயணைப்பு மற்​றும் நீர்​வளத் துறை​யினர் கரையோரங்​களில் கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

ஒகேனக்கல் நிலவரம்: தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் காலை விநாடிக்கு 1 லட்​சத்து 5,000 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து மாலை​யில் 1.25 லட்​சம் கனஅடி​யாக அதி​கரித்​தது. நேற்று மாலை அளவீட்​டின்​போதும் விநாடிக்கு 1.25 லட்​சம் கனஅடி​யாகவே நீர்​வரத்து தொடர்ந்​தது. நீர்​வரத்து உயர்வு காரண​மாக ஒகேனக்​கல் காவிரி ஆறு மற்​றும் அருவி​களில் குளிக்​க​வும், பரிசல் இயக்​க​வும் விதிக்​கப்​பட்ட தடை நீடிக்​கிறது. ஒகேனக்​கல்​லில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்ள நிலை​யில், தரு​மபுரி மாவட்​டத்​தில் கா​விரி கரையோர பகு​தி​களை வரு​வாய், வனம் மற்​றும் காவல்​ துறை​யினர்​ தொடர்ந்​து கண்​காணித்​து வரு​கின்​றனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in