Published : 28 Aug 2014 11:19 AM
Last Updated : 28 Aug 2014 11:19 AM

88 வயது சமஸ்கிருத ஆராய்ச்சியாளருக்கு குடியரசுத் தலைவர் விருது

ஓலைச்சுவடிகளை கண்ட றிந்து அவற்றை நூலாக் கும் பணியில் ஈடுபட்டுள்ள புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறு வனத்தில் பணியாற்றும் சமஸ் கிருத ஆய்வாளர் சம்பந்த சிவாச்சாரியார் (88), குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு, சமஸ்கிருத மொழி மற்றும் இலக்கிய பணிக்காக வாழ்நாள் சாத னைக்கான குடியரசுத் தலை வர் விருது வழங்கப்பட உள்ளது. சான்றிதழ், நினைவுப் பரிசு மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்படும். விருது குறித்து அவர் கூறும்போது, “விரு துக்கு தேர்வு செய்துள்ளது மகிழ்ச்சி. இந்த துறையில் பணியாற்றியது எனது பூர்வ ஜென்ம புண்ணியம்" என்றார்.

விருது பெற உள்ள சம்பந்த சிவாச்சாரியார், கடலூரை சேர்ந்தவர். கோயில் கட்டுவது தொடங்கி பல பெருமை களை உள்ளடக்கிய சைவ ஆகமங்களை அதிக அளவில் சேகரித்து வைத்துள்ளார். கடந்த 1969ம் ஆண்டு முதல் ஓலைச்சுவடிகளை சேகரித்து ஆய்வு செய்து புத்தகமாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஓலைச்சுவடிகளை சேகரிப்பதற்காக நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்து ஆகம தகவல்களை கொண்ட ஓலைச்சுவடிகளை ஏராளமான அளவில் புத்தகங்களாக்கி இருக்கிறார். ஓலைச்சுவடி தொடர் பணிக்காக பிரான்ஸ் அரசிடம் இருந்து பாம்ஸ் விருதை ஏற்கெனவே பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x