அன்புமணி நடைபயணத்துக்கு காவல் துறை தடையா? - சலசலப்பும் பின்னணியும்

அன்புமணி நடைபயணத்துக்கு காவல் துறை தடையா? - சலசலப்பும் பின்னணியும்
Updated on
1 min read

சமூக நீதி, வன்​முறை​யில்லா வாழ்​வு, வேலை, விவ​சா​யம் மற்​றும் உணவு, வளர்ச்​சி, கல்வி உள்​ளிட்ட 10 வகை​யான அடிப்​படை உரிமை​களை மீட்டெடுத்து தமிழக மக்​களுக்கு வழங்க வேண்​டும், தமிழக மக்​களுக்கு நல்​லாட்சி கிடைக்க வகை செய்ய வேண்டும் என வலி​யுறுத்​தி ராம​தாஸின் பிறந்த நாளான நேற்று (ஜூலை 25) தமிழக மக்​கள் உரிமை மீட்​புப் பயணத்​தைத் தொடங்​கப்​போவ​தாக அன்​புமணி அறி​வித்​தார்.

'உரிமை மீட்​க... தலை​முறை காக்க' என்ற இலச்​சினையை​யும், ‘ உரிமைப் பயணம் ’ என்ற தலைப்​பில் பிரச்​சார பாடலை​யும் அன்புமணி வெளி​யிட்டார். இதனையடுத்து இந்த நடைபயணத்​தால் வடதமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கு சீர்​கெடும் என்றும், தனது அனுமதியின்றி பாமக பெயர், கொடியை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்க கோரி டிஜிபி அலு​வல​கத்​தில் ராம​தாஸ் மனு அளித்​தார். எனினும், திட்டமிட்டபடி நேற்று திருப்போரூரில் நடைபயணத்தை தொடங்​கி​னார் அன்புமணி. முரு​கன் கோயி​லில் வழி​பாடு நடத்தி​விட்​டு, அம்​பேத்​கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

இந்த நிலையில், ராமதாஸ் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த விவரங்களை மேற்கோள் காட்டிய தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், தமிழகத்தில் உள்ள காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இந்த நடைபயணத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய பாமக வழக்கறிஞர் பாலு, “அன்புமணியின் தமிழக மக்​கள் உரிமை மீட்​புப் பயணத்​துக்கு தடை இல்லை. அவரது நடைபயணம் திட்டமிட்டபடி தொடரும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை ஊடகங்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பொதுக்​கூட்​டத்​தில் பேசிய அன்புமணி ராமதாஸ், “ராம​தாஸின் வழி​யில் அவரது கனவு​களை நிறைவேற்றவே நடைபயணம் மேற்​கொள்​கிறேன். மக்​களுக்கு உரிமை தராத திமுக அரசை இந்த நடைபயணம் வீட்​டுக்கு அனுப்​பும். 10 உரிமைகளை முன்​வைத்து நடைபயணம் மேற்​கொள்​கிறேன்.

ஒரு நாளைக்கு 2 மணி நேரம் கால்​ஷீட் கொடுத்​து, ஆக்‌ஷன் என்​றதும் முதல்​வர் நடிக்​கிறார். பெண்​களுக்கு ரூ.1,000 கொடுத்​தால் உரிமை கிடைக்​கு​மா. அது டாஸ்​மாக்​குக்​குச் செல்​கிறது. வேளாண் துறை​யில் வளர்ச்சி மைனஸ் 0.12 சதவீத​மாக இருப்​பது வெட்கக்கே​டானது. சுயமரி​யாதை​யுடன் வாழ்​வதற்​கான சமூக நீதியை உரு​வாக்​கு​வோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in