நல வாரியம் அமைக்கும் கட்சிக்கு தேர்தலில் ஆதரவு: தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் அறிவிப்பு

படம்: மெட்டா ஏஐ
படம்: மெட்டா ஏஐ
Updated on
1 min read

கும்பகோணம்: தமிழ்​நாடு பிராமணர்​கள் சங்க மாநிலத் துணைத் தலை​வர் கார்த்​தி​கேயன் ‘இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: திரு​வாரூருக்கு வந்த அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனிச்​சாமி​யிடம், பிராமணர்​களுக்கு இடஒதுக்​கீடு வழங்​கி, நல வாரி​யம் அமைக்க வேண்​டும். கும்​பகோணம் தொகு​தியை பிராமணருக்கு ஒதுக்க வேண்​டும் என்று வலி​யுறுத்​தி​யுள்​ளோம்.

அவர் வரும் தேர்​தலில் எங்​கள் கோரிக்​கையை நிறைவேற்​று​வார் என நம்​பு​கிறோம். அப்​படி அவர் அறி​வித்​தால், தமிழகத்​தில் உள்ள 45 லட்​சம் பிராமணர்களும் அவருக்கு ஆதரவு அளிப்​போம். அதே​நேரத்​தில், எங்​களது கோரிக்​கை​யை, திமுக தேர்​தல் அறிக்​கை​யில் அறி​வித்​தா​லும் மகிழ்ச்​சி​யுடன் ஏற்​றுக்​கொள்​வோம். ஆனால், திமுகவை ஆதரிப்​பது என்​பது, அப்​போதுள்ள மனநிலை​யைப் பொறுத்​த​தாகும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

2 தொகுதிகளில் வாய்ப்பு: இந்து மக்​கள் கட்சி மாநில பொதுச் செய​லா​ளர் குரு​மூர்த்தி கூறும்​போது, “தமிழகத்​தில் அண்​மைக்​காலமாக பிராமணர்​களை இழி​வுபடுத்​தும் செயல்​கள் தொடர்ந்து நடை​பெற்று வரு​கின்​றன. பிராமணர்​களுக்கு உரிய அங்​கீ​காரம், பிர​தி​நி​தித்​து​வம் இல்​லாததே இதற்​குக் காரணம். எனவே, வரும் தேர்​தலில் கும்பகோணம், ரங்​கம், மைலாப்​பூர், ராம​நாத​புரம் ஆகிய 4 தொகுதிகளில் ஏதேனும் 2 தொகு​தி​களில் போட்​டி​யிட எந்​தக் கட்சி வாய்ப்பு வழங்​கு​கிறதோ, அந்தக் கட்சிக்கு ஆதர​வளிப்போம்” என்​றார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in