

சென்னை: தமிழகத்தில் எட்டு இடங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அதற்கான பிரச்சார அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,திமுக, அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கட்சிப் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன.
இந்நிலையில், மதிமுக சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை: தமிழகத்தின் எட்டு இடங்களில் நம் மாநில வாழ்வாதாரங்களைக் காக்க, ஜனநாயகத்தைப் பாதுகாக்க மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கழகத்தினர், தமிழக உரிமைகளுக்காகப் போராடுகிறவர்கள், தமிழ்நாட்டின் மீது அடங்காப் பற்றுக் கொண்டவர்கள் பல்லாயிரக் கணக்கில் திரண்டிட கழக நிர்வாகிகள் தக்க ஏற்பாடுகளைச் செய்வார்கள்.