டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் கைதான அபுபக்கர் சித்திக்கை 5 நாள் விசாரிக்க அனுமதி

டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் கைதான அபுபக்கர் சித்திக்கை 5 நாள் விசாரிக்க அனுமதி
Updated on
1 min read

சென்னை: ​பாஜக நிர்​வாகி டாக்​டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்​கில் கைதான அபுபக்​கர் சித்​திக்கை 5 நாள் காவலில் விசாரிக்க நீதி​மன்​றம் அனு​மதி அளித்​துள்​ளது. பாஜக மாநில மருத்​துவ அணி செயல​ராக இருந்த டாக்​டர் அரவிந்த் ரெட்​டி, வேலூர் கொசப்​பேட்​டை​யில் 2012-ல் படு​கொலை செய்​யப்​பட்​டார்.

இது தொடர்​பாக சிபிசிஐடி பிரிவு போலீ​ஸார் விசா​ரித்​து, தீவிர​வா​தி​கள் பிலால் மாலிக், போலீஸ் பக்​ருதீன் உள்​ளிட்​டோரை கைது செய்​தனர். மேலும், முக்​கிய நபரான அபுபக்​கர் சித்​திக்கை தனிப்​படை போலீ​ஸார் தேடி வந்​தனர்.

குண்​டு​வெடிப்பு உள்​ளிட்ட பல்​வேறு வழக்​கு​களில் தொடர்​புடைய அபுபக்​கர் சித்​திக் தொடர்ந்து இருப்​பிடத்தை மாற்​றிவந்​த​தால், அவரைக் கைது செய்​வ​தில் தீவிர​வாத தடுப்​புப் பிரிவு போலீ​ஸாருக்கு பின்​னடைவு ஏற்​பட்​டது.

இந்​நிலை​யில், கடந்த 30 ஆண்​டு​களாக தலைமறை​வாக இருந்த அபுபக்​கர் சித்​திக்கை ஆந்​திர மாநிலம் அன்​னமய மாவட்​டம் கடப்பா அரு​கே​யுள்ள ராயச்​சோட்​டில் தமிழக போலீ​ஸார் அண்​மை​யில் துப்​பாக்கி முனை​யில் கைது செய்​தனர். கடந்த 1-ம் தேதி எழும்​பூர் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​படுத்​தப்​பட்ட அபுபக்​கர் சித்​திக், பின்​னர் புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

சென்னை எழும்​பூரில் செயல்​பட்ட பழைய காவல் ஆணைய அலு​வலக வளாக சுவரில் வெடிகுண்டு வைத்​தது உள்​ளிட்ட 7 வழக்​கு​கள் தொடர்​பாக ஏற்​க​னவே 6 நாட்​கள் தீவிர​வாத தடுப்​புப் பிரிவு போலீ​ஸா​ரால் அபுபக்​கர் சிக்​திக் விசா​ரிக்​கப்​பட்​டார்.

இந்​நிலை​யில், டாக்​டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்​கில் அபுபக்​கர் சித்​திக்கை 7 நாட்​கள் காவலில் வைத்து விசா​ரிக்க அனு​மதி கோரி, பூந்​தமல்​லி​யில் உள்ள தேசிய புல​னாய்வு சிறப்பு நீதி​மன்​றத்​தில் போலீ​ஸார் மனு அளித்​தனர்.

இந்த மனுவை விசா​ரித்த நீதிபதி மலர்​விழி, அபுபக்​கர் சித்​திக்கை 5 நாட்​கள் போலீஸ் காவலில் வைத்து விசா​ரிக்க அனு​மதி அளித்தார். மேலும், விசா​ரணை முடிந்து வரும் 28-ம் தேதி மீண்​டும் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​து​மாறும் உத்​தர​விட்​டார். இதையடுத்து தீவிர​வாத தடுப்​புப் பிரிவு போலீ​ஸார் அபுபக்​கர் சித்​திக்கை ரகசிய இடத்​துக்​கு அழைத்​துச்​ சென்​று, வி​சா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in