வழக்​கறிஞர்​கள் மீது கட்​சிக்​காரர்​கள் வைத்துள்ள நம்பிக்கை வீணாகி விடக்​கூ​டாது - பணி ஓய்வு பெறும் நீதிபதி சுப்பிரமணியன் அறிவுரை

ஆர்.சுப்பிரமணியன்
ஆர்.சுப்பிரமணியன்
Updated on
1 min read

சென்னை: வழக்கு தொடரும் கட்​சிக்​காரர்​கள் தங்​கள் மனை​வியை விட தங்​களது வழக்​கறிஞர்​களைத்​தான் அதி​கம் நம்புகின்றனர். அந்த நம்​பிக்கை ஒரு​போதும் வீணாக்கி​விடக் கூடாது என பணி ஓய்வு பெறும் உயர் நீதி​மன்ற நீதிபதி ஆர்​. சுப்பிரமணி​யன் அறி​வுறுத்​தி​னார்.

சென்னை உயர் நீதி​மன்ற மூத்த நீதிபதி ஆர். சுப்​பிரமணி​யன் பணி ஓய்வு பெற்​ற​தால், அவருக்கு பிரிவு உபசார விழா நேற்று உயர் நீதி​மன்ற கலை​யரங்​கில் நடை​பெற்​றது. விழாவுக்கு உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி எம்​.எம்​. ஸ்ரீவஸ்​தவா தலைமை வகித்தார். அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​. ராமன் பேசுகை​யில், நீதிபதி ஆர்.சுப்​பிரமணி​யன் கடந்த 9 ஆண்​டு​களில் 37 ஆயிரம் வழக்​கு​களை விசா​ரித்து தீர்வு கண்டுள்ளதாக பாராட்​டிப் பேசி​னார்.

இந்​நிகழ்​வில் சக உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள், அரசு வழக்​கறிஞர்​கள், வழக்​கறிஞர்​கள் சங்க நிர்​வாகி​கள், வழக்​கறிஞர்​கள், நீதித்​துறை ஊழியர்​கள் திரளாக பங்​கேற்​றனர்.

இந்​நிகழ்​வில் நீதிபதி ஆர்​. சுப்​பிரமணி​யன் ஏற்​புரை​யாற்றி பேசுகை​யில், “சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் சுமார் 33 ஆண்​டு​கள் வழக்​கறிஞ​ராக​வும், நீதிப​தி​யாக​வும் பணி​யாற்​றிய முழுத் ​திருப்​தி​யுடன் விடை​பெறுகிறேன். நீதிப​தி​களும், வழக்​கறிஞர்​களும் வரு​வார்​கள், போவார்​கள்.

ஆனால் உயர் நீதி​மன்​றம் என்​பது நிரந்​தர​மான அமைப்​பு. ஜனநாயகம் என்ற தேரில் நீதிப​தி​களும், வழக்​கறிஞர்​களும் இருசக்கரங்​கள். நீதி பரி​பாலனத்​துக்கு இந்த இரு​வரும் முக்​கிய​மானவர்​கள்.

வழக்​கறிஞர்​கள் வழக்கு விவரங்​களை முழு​மை​யாகப் படித்​து​விட்டு விசா​ரணைக்கு தயா​ராக வந்​தால்​தான் நீதிப​தி​கள் கேட்​கும் எந்த கேள்வி​களுக்​கும் அவர்​களால் பதிலளிக்க முடி​யும். சில நேரங்​களில் வழக்கு கட்​டு​களை படிக்​காமல் விசா​ரணைக்கு ஆஜராகும் வழக்​கறிஞர்​களை நானும் கடிந்து கொண்​டதுண்​டு.

வழக்கு தொடரும் கட்​சிக்​காரர்​கள் தங்​களது மனை​வியை விட தனது வழக்​கு​களை நடத்​தும் வழக்​கறிஞர்​களைத்​தான் பெரி​தாக நம்​பு​கின்​றனர். அந்த நம்​பிக்கை ஒரு​போதும் வீணாகி​விடக்​கூ​டாது” என்​றார். நீதிபதி ஆர்​.சுப்​பிரமணி​யன் பணி ஓய்வு பெறு​வதன் மூலம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பணி​யில் உள்ள நீதிப​தி​களின் எண்​ணிக்கை 55 ஆக குறைந்​து, காலி​யிடங்​களின்​ எண்ணிக்​கை 20 ஆக உயர்ந்​துள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in