அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து
Updated on
1 min read

சென்னை: வங்கி மோசடி புகார் தொடர்​பாக அமைச்​சர் கே.என்​.நேரு​வின் சகோ​தரர் ரவிச்​சந்​திரன் மீது அமலாக்​கத்​துறை பதிவு செய்​திருந்த வழக்கை ரத்து செய்​துள்ள உயர் நீதி​மன்​றம், பறி​முதல் செய்​யப்​பட்ட பொருட்​களை​யும் திருப்பி ஒப்​படைக்க அமலாக்​கத்​துறைக்கு உத்​தர​விட்​டுள்​ளது.

கடந்த 2013-ம் ஆண்டு இந்​தி​யன் ஓவர்​சீஸ் வங்​கி​யிட​மிருந்து பெற்ற ரூ.30 கோடி கடன் தொகையை தனது சகோதர நிறு​வனங்களுக்கு திருப்பி விட்​ட​தால் வங்​கிக்கு ரூ.22.48 கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாகக்​கூறி அமைச்​சர் நேரு​வின் சகோ​தரர் என்.ரவிச்​சந்​திரன் மற்றும் அவர் இயக்​குந​ராக உள்ள நிறு​வனத்​துக்கு எதி​ராக சிபிஐ 2021-ம் ஆண்டு வழக்​குப்​ப​திவு செய்​தது. இந்த வழக்​கின் அடிப்​படை​யில் அமலாக்​கத்​துறை​யும் வழக்​குப்​ப​திவு செய்து ரவிச்​சந்​திரன் மற்​றும் அவருக்கு சொந்​த​மான நிறு​வனங்களில் சோதனை மேற்​கொண்டது.

இந்​நிலை​யில் எழும்​பூர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருந்த சிபிஐ வழக்கை ரத்து செய்​யக்​கோரி என். ரவிச்​சந்​திரன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​திருந்​தார். அந்த வழக்கை விசா​ரி்த்த நீதிபதி டி. பரத சக்​ர​வர்த்​தி, மனு​தா​ர​ரான ரவிச்சந்திரனுக்கு ரூ. 30 லட்​சம் அபராதம் விதித்​தும், அதில் ரூ. 15 லட்​சத்தை சிபிஐ-க்​கும், ரூ. 15 லட்​சத்தை சமரச தீர்வுமையத்துக்கும் செலுத்த வேண்​டும் என்ற நிபந்​தனை​யுடன் சிபிஐ பதிவு செய்​திருந்த வழக்கை ரத்து செய்து உத்​தர​விட்​டார்.

இந்​நிலை​யில் சிபிஐ பதிவு செய்​திருந்த வழக்கு ரத்து செய்​யப்​பட்​ட​தால் அந்த வழக்​கின் அடிப்​படை​யில் பதி​யப்​பட்ட அமலாக்கத்துறை வழக்​கை​யும் ரத்து செய்​யக்​கோரி​யும், சோதனை​யின்​போது கைப்​பற்​றப்​பட்ட மின்​னணு சாதனங்​கள் மற்​றும் பணத்தை திருப்​பித்​தரக் கோரி என்.ரவிச்​சந்​திரன், உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கு நீதிப​தி​கள் எம்​.எஸ்​.ரமேஷ், வி. லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடை​பெற்​றது. அப்​போது நீதிபதி​கள், ‘சிபிஐ பதிவு செய்​திருந்த மூல வழக்கு ரத்து செய்​யப்​பட்டு விட்​ட​தால், அந்த வழக்​கின் அடிப்​படை​யில் அமலாக்கத்துறை​யால் பதி​யப்​பட்ட இந்த வழக்​கை​யும் ரத்து செய்​கிறோம். பறி​முதல் செய்​யப்​பட்ட மி்ன்​னணு சாதனங்​கள் மற்றும் பணத்தை திருப்பி ஒப்​படைக்க வேண்​டும்​’ என உத்​தர​விட்​டுள்​ளனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in