

இந்தியாவில் முதல் முறையாக 68 வயது முதியவருக்கு இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறு வைச் சிகிச்சை செய்து அப்போலோ மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட் டத்தைச் சேர்ந்தவர் ஹனிஃபா (68). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்டிருந்தார். திருச்சூரில் கடந்த ஆண்டு நடத்திய மருத் துவ சோதனையில் இவரது இதயமும், நுரையீரலும் பாதிக்கப் பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் உடனடி யாக இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
உறுப்புகள் தானம்
அதன்படி ஹனிஃபா கடந்த மார்ச் மாதம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். இந்நிலையில் மார்ச் 18ம் தேதி ஸ்டான்லி மருத்துவ மனையில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது அவ ரது இதயம், நுரையீரலை ஹனீஃபாவுக்கு டாக்டர்கள் பொருத்தினர்.
இதுதொடர்பாக அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர்கள் பால்ரமேஷ், சுந்தர் ஆகியோர் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் முதல் முறையாக வயது முதிர்ந்த நோயாளி ஒரு வருக்கு ஒருங்கிணைந்த இதய மற்றும் நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை அப்போலோ மருத்துவமனையில் செய்யப் பட்டுள்ளது. இந்த அறுவைச் சிகிச்சை சுமார் 7 மணி நேரம் நடந்தது. சிகிச்சை முடிந்த 10 நாட் களில் ஹனீஃபா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால், அவருக்கு மீண்டும் ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை மருத்துவம் மட்டும் குணப்படுத்த வில்லை. அவருடைய தன்னம்பிக் கையும், தீவிர விடாமுயற்சியும் தான் குணப்படுத்தியுள்ளது. இந்த சிகிச்சைக்கு சுமார் ரூ.30 லட்சம் வரை செலவாகியுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.
இதுதொடர்பாக ஹனிஃபா கூறும்போது, “நான் உடல்நிலை கோளாறால் 4 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தேன். நடக்க முடியாமலும், உட்கார முடியாமலும் கஷ்டப் பட்டேன். என் உயிரை காப்பாற்றிய டாக்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள் கிறேன்” என்றார்.
பேட்டியின் போது அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ப்ரீதா ரெட்டி உடன் இருந்தார்.