தங்கமணிக்கு எதிராக தடதடக்கும் நாமக்கல் அதிமுக நகரச் செயலாளர்! - வீட்டுக்கே அழைத்து பஞ்சாயத்துப் பேசிய இபிஎஸ்

தங்கமணிக்கு எதிராக தடதடக்கும் நாமக்கல் அதிமுக நகரச் செயலாளர்! - வீட்டுக்கே அழைத்து பஞ்சாயத்துப் பேசிய இபிஎஸ்
Updated on
2 min read

நாமக்கல் மாவட்ட அதிமுக என்றால் அது முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தான். ஒருவகையில், இபிஎஸ்ஸுக்கு சம்பந்தி உறவுமுறைக்காரர் என்பதால் அதிமுக-வில் தனித்த செல்வாக்குடன் இருக்கும் அவருக்கே நாமக்கல்லில் ஒருவர் சவால்விட்டுக் கொண்டிருக்கிறார்.

நாமக்கல் மாவட்டச் செயலாளராக இருக்கும் தங்கமணியின் எண்ணப்படி தான் கட்சிக்குள் எதுவுமே நடக்கும். இந்த நிலையில், முன்னாள் எம்எல்ஏ-வும் நாமக்கல் நகரச் செயலாளருமான கே.பி.பி.பாஸ்கர் இப்போது தங்கமணிக்கு எதிராக கொடிபிடித்து நிற்கிறார். மாவட்டத்தில் தங்கமணியை தாண்டி எதுவும் நடக்காது என்பது தெரிந்தும் பழனிசாமியின் நேரடி தொடர்பில் தனி ரூட்டில் அரசியல் செய்து வருகிறார் பாஸ்கர்.

இதை ஏற்கமுடியாத தங்கமணி தரப்பு, பாஸ்கரை ஓரங்கட்டுவதற்கான வேலைகளைச் செய்து வருகிறது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாத பாஸ்கர், கடந்த 5-ம் தேதி தனது ஆதரவாளர்கள் சகிதம் சேலத்துக்கே சென்று பழனிசாமியை நேரில் சந்தித்து, தங்கமணி மீதான தனது சங்கடங்களை பட்டியல் போட்டுவிட்டு வந்திருக்கிறார்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய நாமக்கல் அதிமுக-வினர் சிலர், “மாவட்ட அதிமுக-வில் தங்கமணி வைத்தது தான் சட்டம் என்றாலும் நாமக்கல் நகர அதிமுக-வில் பாஸ்கர் சொல்வது தான் நடக்கும். இதைத்தான் தங்கமணி தரப்பால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாமக்கல் மாவட்ட அதிமுக-வை இரண்டாகப் பிரித்து தன்னையும் மாவட்டச் செயலாளராக்க வேண்டும் என பாஸ்கர் வலியுறுத்தி வருகிறார். தங்கமணி இதற்கு குறுக்கே நிற்கிறார்.

இதனிடையே, 2026-ல் மீண்டும் நாமக்கல்லில் போட்டியிடுவதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறார் பாஸ்கர். ஆனால், இவருக்குப் போட்டியாக மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளரான தொழிலதிபர் ஸ்ரீதேவி மோகன் என்ற மோகனை தயார்படுத்தி வருகிறார் தங்கமணி. இது தெரிந்ததில் இருந்தே தங்கமணி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை பாஸ்கரும் அவரது ஆதரவாளர்களும் புறக்கணித்து வருகிறார்கள்.

அண்மையில் நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், இபிஎஸ் மீண்டும் முதல்வராக வேண்டும் என மாவட்ட மகளிரணி நடத்திய திருவிளக்கு பூஜையில் கூட பாஸ்கர் தரப்பு லந்துகொள்ளவில்லை. அதற்கு, தங்களுக்கு அழைப்பு வராததால் கலந்துகொள்ளவில்லை என பாஸ்கர் தரப்பு காரணம் சொன்னது. இதையடுத்துத்தான் பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்து தங்கமணிக்கு எதிராக பிராது சொல்லிவிட்டு வந்திருக்கிறது பாஸ்கர் தரப்பு” என்றார்கள்.

தங்​கமணி ஆதர​வாளர்​களோ, “தொடர்ந்து பாஸ்​கரே தான் எம்​எல்ஏ ஆகவேண்​டு​மா... மற்​றவர்​களுக்​கும் எம்​எல்ஏ ஆகவேண்​டும் என்ற ஆசை இருக்​கா​தா? இந்​த​முறை மாவட்​டச் செய​லா​ளர் யாரை பரிந்​துரைக்​கி​றாரோ அவருக்​குத்​தான் நாமக்​கல் சீட். நாமக்​கல், ஈரோடு, திருச்சி ஆகிய 3 மாவட்​டங்​களுக்கு பொறுப்​பாள​ராக இருக்​கி​றார் தங்​கமணி. பாஸ்​கர் நகரச் செய​லா​ளர் மட்​டும் தான். தங்​கமணிக்கு எதி​ராக புகார் சொல்ல படையை திரட்​டிக் கொண்டு போன​வர் பொதுச்​செய​லா​ளரிடம் வாங்கி கட்​டிக் கொண்டு வந்​தது தான் மிச்​சம்” என்​கி​றார்​கள்.

இதுகுறித்து பாஸ்​கரிடம் கேட்​டதற்​கு, “கடந்த இரண்டு வருடத்​தில் எனது தாயாரும் மனை​வி​யும் அடுத்​தடுத்து இறந்து போன​தால் என்​னால் கட்சி நிகழ்ச்​சிகளில் சகஜ​மாக கலந்து கொள்ள முடிய​வில்​லை. நாமக்​கல்​லில் தலைமை யாருக்கு சீட் கொடுத்​தா​லும் வேலை செய்​வேன். ஆனால், கட்​சிக்​காக எந்த வேலை​யும் செய்​யாத ஒரு​வரை (தேவி மோகன்) முன்​னிலைப்​படுத்​து​வதை என்​னால் ஏற்​றுக்​ கொள்ள இயல​வில்​லை.

மாவட்​டத்​தைப் பிரித்து என்னை மாவட்​டச் செய​லா​ள​ராக்க வேண்​டும் என்​றெல்​லாம் நான் சொல்​ல​வில்​லை. எனக்கு இந்​தப் பதவியே போதும். தங்​கமணியே மாவட்​டச் செய​லா​ள​ராக இருக்​கட்​டும். ஆனால், சூழ்​நிலை காரண​மாக கட்சி நிகழ்ச்​சிகளுக்கு வரா​ததை வைத்து இட்​டுக்​கட்டி பேசுவதை ஏற்​க​முடிய​வில்​லை.

தலை​மை​யிடம் இருந்து அழைப்பு வந்​த​தால் பொதுச்​செய​லா​ளரை நேரில் சந்​தித்​தேன். அப்​போது பொதுச்​செய​லா​ளர், தங்​கமணி உள்பட நாங்​கள் மூவர் மட்​டுமே அங்கு இருந்​தோம். ‘இனி அனுசரித்து கட்​சிப் பணி​களைப் பாருங்​கள்’ என பொதுச்​செய​லா​ளர் அறி​வுறுத்​தி​னார். அதை ஏற்​றுக்​கொண்டு திரும்​பினேன். அழைத்​தால் கட்சி நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​பேன். மக்​களுக்கு பணி செய்ய வேண்​டும் என்​பது தான் எனது நோக்​கம்” என்​றார்.

நாமக்​கல் மாவட்ட அதி​முக-​வில் அவுட் ஆஃப் கன்ட்​ரோலில் இருக்​கும் பாஸ்​கரை தங்​கமணி எப்​படி சமாளிக்​கி​றார் என்​பதை பொறுத்​திருந்து தான் பார்​க்க வேண்​டும்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in