தமிழக அரசின் தமிழ் சிறப்பு விருதுகள்: படைப்பாளர்கள் ஆக.22 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் தமிழ் சிறப்பு விருதுகள்: படைப்பாளர்கள் ஆக.22 வரை விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

சென்னை: தமிழக அரசின் தேவநேய பாவாணர் விருது, வீர​மா​முனிவர் விருது உள்​ளிட்ட விருதுகளுக்கு தமிழ் அறிஞர்​கள் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக செந்​தமிழ் சொற்​பிறப்​பியல் அகர​முதலி திட்ட இயக்​குநரகம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு விவரம்: தமிழ் மொழியின் மேம்​பாட்​டுக்கு பாடு​படும் தமிழ் அறிஞர்​கள், படைப்​பாளர்​களுக்கு தமிழக அரசு பல்​வேறு விருதுகள், பரிசுகளை வழங்கி வரு​கிறது. அந்த வகை​யில் 2025-ம் ஆண்​டுக்​கான தேவநேய பாவாணர் விருது (ரூ.2 லட்​சம் & ஒரு பவுன் தங்க பதக்​கம்), வீர மா​முனிவர் விருது (ரூ.2 லட்​சம் & ஒரு பவுன் தங்க பதக்​கம்), தூய தமிழ் ஊடக விருது (ரூ.50 ஆயிரம் & ரூ.25 ஆயிரம் மதிப்பு தங்க பதக்​கம்), நற்​றமிழ் பாவலர் விருது (ரூ.50 ஆயிரம் & ரூ.25 ஆயிரம் மதிப்பு தங்க பதக்​கம்), தூய தமிழ் பற்​றாளர் விருது (ரூ.20 ஆயிரம்) ஆகிய விருதுகளுக்​கும், தூய தமிழ் பற்​றாளர் பரிசுக்​கும் (ரூ.5 ஆயிரம் பரிசு) தமிழ் அறிஞர்​களிடம் இருந்து விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

விண்​ணப்​பத்தை http://sorkuvai.tn.gov.in என்ற இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்​து​ கொள்​ளலாம். பூர்த்தி செய்த விண்​ணப்​பத்தை ‘இயக்​குநர், செந்​தமிழ் சொற்​பிறப்​பியல் அகர​முதலி திட்ட இயக்​குநரகம், நகர நிர்​வாக அலு​வலக கட்​டிடம் (முதல் தளம்), 75, சாந்​தோம் நெடுஞ்​சாலை, எம்​ஆர்சி நகர், சென்​னை-600023’ என்ற முகவரி​யில் நேரிலோ, அஞ்​சல் வழி​யாகவோ அல்​லது http://awards.tn.gov.in என்ற இணை​யதளம் வாயி​லாகவோ ஆகஸ்ட் 22-ம் தேதிக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும். கூடு​தல் விவரங்​கள் அறிய 044-29520509 என்ற தொலைபேசி எண்​ணில் தொடர்பு கொள்​ளலாம்.

ஆய்வு மலருக்கு கட்​டுரைகள்: வீர​மா​முனிவர் பிறந்​த​நாளான நவம்​பர் 8-ம் தேதி தமிழ் அகரா​தி​யியல் நாளாக கொண்​டாடப்​படு​கிறது. அன்று வெளி​யிடப்பட உள்ள அகராதி ஆய்வு மலருக்கு கட்​டுரைகள் வரவேற்​கப்​படு​கின்​றன. கட்​டுரைகளை கணினி​யில் தட்​டச்சு செய்து agarathimalar2020@gmail.com என்ற மின்​னஞ்​சலுக்கு செப்​டம்​பர் 1-ம் தேதி மாலை 5 மணிக்​குள் அனுப்ப வேண்​டும்.

இதுத​விர மேலே குறிப்​பிட்​டுள்ள முகவரிக்​கும் அனுப்ப வேண்​டும். தங்​கள் முகவரி, செல்​போன் எண், மின்​னஞ்​சல் முகவரி, ஒருபக்க அளவில் சுய​விவர குறிப்பு ஆகிய​வற்​றை​யும் கட்​டா​யம் இணைத்து அனுப்ப வேண்​டும்.

அனுப்​பப்​படும் ஆய்​வுக் கட்டுரை இதற்கு முன்பு வேறு எந்த இதழுக்​கும் வழங்​கப்​பட​வில்லை என்ற உறு​தி​மொழியை​யும் தன்​னொப்​பமிட்டு (self attested) அனுப்ப வேண்​டும். தேர்வு குழு​வால் தேர்வு செய்​யப்​படும் கட்​டுரைகள், ‘தமிழ் அகரா​தி​யியல் நாள்’ சிறப்பு ஆய்வு மலரில் இடம்​பெறும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in