மதுரை ஆதீனத்தின் முன்ஜாமீனை ரத்து செய்ய கோரி போலீஸார் மனு: ஆதீனம் தரப்பில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை ஆதீனத்தின் முன்ஜாமீனை ரத்து செய்ய கோரி போலீஸார் மனு: ஆதீனம் தரப்பில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
2 min read

சென்னை: ​போலீ​ஸாரின் விசா​ரணைக்கு ஒத்​துழைப்பு அளிக்க மறுப்​ப​தால் மதுரை ஆதீனத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்​யக்​கோரி போலீ​ஸார் தாக்​கல் செய்​துள்ள மனுவுக்கு ஆதீனம் தரப்​பில் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்​னை​யில் நடை​பெற்ற மாநாட்​டில் பங்​கேற்க காரில் வந்த மதுரை ஆதீனத்​தின்​மீது உளுந்​தூர்​பேட்டை அருகே மற்​றொரு கார் மோதி விபத்​துக்​குள்​ளானது. இதுதொடர்​பாக மாநாட்​டில் பேசிய ஆதீனம் தன்னை கொலை செய்ய சதி நடந்​துள்​ள​தாக​வும், பாகிஸ்​தானுக்கு தொடர்பு இருப்​ப​தாக​வும் குற்​றம்​ சாட்​டி​யிருந்​தார்.

இதுகுறித்து சென்​னையைச் சேர்ந்த வழக்​கறிஞர் ராஜேந்​திரன் அளித்த புகாரின்​பேரில் சென்னை சைபர் கிரைம் போலீ​ஸார் மதுரை ஆதீனம் மீது 4 பிரிவு​களில் வழக்​குப்​ப​திவு செய்​தனர். இந்த வழக்​கில் ஆதீனத்​துக்கு முன்​ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில் அவர் போலீ​ஸாரின் விசா​ரணைக்கு ஒத்​துழைப்பு அளிக்க மறுப்​ப​தால் அவருக்கு வழங்​கப்​பட்​டுள்ள முன்​ஜாமீனை ரத்து செய்ய வேண்​டும் எனக்​கோரி சென்னை போலீ​ஸார் தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனு மீதான விசா​ரணை நீதிபதி எம்​.நிர்​மல்​கு​மார் முன்​பாக நேற்று நடந்​தது.

அப்​போது காவல்​துறை தரப்​பில் ஆஜரான அரசு கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஆர்​.​முனியப்​ப​ராஜ், மதுரை ஆதீனம் விசாரணைக்கு ஒத்​துழைக்க மறுத்து வரு​கிறார். எனவே அவருக்கு வழங்​கப்​பட்​டுள்ள முன்​ஜாமீனை ரத்து செய்ய வேண்​டும் எனக் கோரி​னார். அதையடுத்து நீதிப​தி, இதுதொடர்​பாக மதுரை ஆதீனம் வரும் ஜூலை 30-க்​குள் பதிலளிக்க வேண்​டும் என உத்தர​விட்டு வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​துள்​ளார்​.

அண்ணாமலை கண்டனம்: இதனிடையே தனது எக்ஸ் தளத்​தில் தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கூறியிருப்ப​தாவது: மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீஞானசம்​பந்த தேசிக சுவாமிகளுக்கு வழங்​கப்​பட்ட முன்​ஜாமீனை ரத்து செய்​யக் கோரி, தமிழக காவல்​துறை உயர் நீதி​மன்​றத்​தில் மனு கொடுத்​திருப்​பது வன்​மை​யாகக் கண்​டிக்​கத்​தக்​கது.

கடந்த சில நாட்​களுக்கு முன்​பாக, குடல் இறக்​கம் அறு​வைச் சிகிச்சை முடிந்து ஓய்​வில் இருக்​கும் மதுரை ஆதீனத்​தை, இரண்டு நாட்​களுக்கு முன்பு சென்​று, விசா​ரணை என்ற பெயரில் சுமார் ஒரு மணி நேரம் துன்​புறுத்​தி​விட்​டு, தற்​போது விசா​ரணைக்கு ஒத்​துழைக்​க​வில்லை என்று திமுக அரசின் காவல்​துறை கூறு​வது உள்​நோக்​கம் கொண்​டது.

தமிழகம் முழு​வதும் சட்​டம் ஒழுங்கு சந்தி சிரித்​துக் கொண்​டிருக்​கிறது. பத்து வயது குழந்தை மீது பாலியல் தாக்​குதல் நடத்​திய நபரை இன்​னும் கண்​டு​பிடிக்​க​வில்​லை. கிட்னி திருடும் திமுக கும்​பலை விசா​ரிக்க நேரமில்​லை. காவல்​துறை​யினருக்கே திமுகவின​ரால் பாது​காப்​பில்​லாத நிலை இருக்​கிறது.

ஆனால், உப்​புசப்​பில்​லாத காரணங்​களைக் கூறி, மதச்​சார்​பின்மை என்ற பெயரில் யாரையோ திருப்​திப்​படுத்த நாடக​மாடிக் கொண்​டிருக்​கிறது திமுக அரசு. அறுவை சிகிச்சை முடிந்து ஓய்​வில் இருக்​கும் மதுரை ஆதீனத்தை தொடர்ந்து துன்​புறுத்​தும் போக்​கை, திமுக அரசின் காவல்​துறை கைவிட வேண்​டும். உடனடி​யாக, அவரது முன்​ஜாமீனை ரத்து செய்​யக் கோரும் மனு​வைத்திரும்​பப் பெற வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in