4 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத திமுக தேர்தல் வாக்குறுதி: போக்குவரத்து ஓய்வூதியர்கள் தர்ணா

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு சார்பில், ஓய்வு பெற்றோர் மற்றும் பணியில் இருக்கும் போக்குவரத்து ஊழியர்கள் சென்னை பல்லவன் சாலையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: எல்.சீனிவாசன் |
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு சார்பில், ஓய்வு பெற்றோர் மற்றும் பணியில் இருக்கும் போக்குவரத்து ஊழியர்கள் சென்னை பல்லவன் சாலையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: எல்.சீனிவாசன் |
Updated on
1 min read

சென்னை: போக்​கு​வரத்து ஓய்​வூ​தி​யர்​களுக்​கான தேர்​தல் வாக்​குறு​தியை நிறைவேற்​றாத திமுக அரசை கண்​டித்​து, தமிழகம் முழுவதும் நேற்று தர்ணா நடை​பெற்​றது. திமுக தேர்​தல் வாக்​குறு​திப்​படி 2013-ம் ஆண்டு ஏப்​.1-ம் தேதிக்​குப் பிறகு பணி​யில் சேர்ந்தவர்​களுக்கு பழைய ஓய்​வூ​தி​யம் வழங்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, சிஐடி​யு-வின் போக்குவரத்து மற்​றும் ஓய்​வூ​தி​யர் நலப் பிரிவு சார்​பாக தமிழகம் முழு​வதும் தர்ணா போ​ராட்​டம் நடை​பெற்​றது.

இதன் பகு​தி​யாக சென்​னை, பல்​ல​வன் சாலை​யில் நடை​பெற்ற போ​ராட்​டத்​தில் சம்​மேளன பொதுச்​செய​லா​ளர் கே.ஆறுமுக நயினார், பொருளாளர் சசிகு​மார், அரசாங்க போக்​கு​வரத்து ஊழியர் சங்க பொதுச்​செய​லா​ளர் வி.த​யானந்​தம், தலை​வர் ஆர்.துரை, ஓய்வு பெற்றோர் நல அமைப்​பின் மாநிலத் தலை​வர் எம்​.சந்​திரன், பொருளாளர் ஆதி​மூலம் உள்​ளிட்ட முக்​கிய நிர்​வாகிகள் பங்​கேற்று பேசினர்.

முன்​ன​தாக செய்​தி​யாளர்​களிடம் தயானந்​தம் கூறிய​தாவது: ஓய்வு பெற்​றோர் கோரிக்​கைகளை ஆட்​சிக்கு வந்த 100 நாட்​களில் நிறைவேற்​று​வ​தாக வாக்​குறுதி அளிக்​கப்​பட்​டது. அதன்​படி, பஞ்​சப்​படி உயர்​வு, ஓய்வு பெறும் தொழிலா​ளர்​களுக்கு பழைய ஓய்வூதிய திட்​டத்தை அமல்​படுத்​துதல் போன்ற திமுக தேர்​தல் வாக்​குறு​தியை 4 ஆண்​டு​கள் கடந்​தும் முதல்​வர் நிறைவேற்றவில்லை.

2023-ம் ஆண்டு ஜூலைமாதம் முதல் ஓய்வு பெற்​றவர்​களுக்கு ரூ.3 ஆயிரத்து 500 கோடி வழங்​கப்​பட​வில்​லை. ஓய்வு பெற்​றோருக்​கான கோரிக்கை நிறைவேற்​றப்​பட​வில்லை என்​றால் ஆக.5, 6, 7 தேதி​களில் தரு​மபுரியில் நடை​பெற உள்ள மாநில சம்​மேளனம் மாநாட்டில் அடுத்​தகட்ட போ​ராட்​டம் குறித்த முடிவை அறி​விப்​போம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in