தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சுய உதவி குழுவினர் 2.50 கோடி பேருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கி கடனுதவி

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சுய உதவி குழுவினர் 2.50 கோடி பேருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கி கடனுதவி
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் கடந்த 4 ஆண்​டு​களில் சுயஉதவி குழு பெண்​கள் 2.50 கோடி பேருக்கு ரூ.1.21 லட்​சம் கோடி வங்கி கடனுதவி வழங்கி தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் சாதனை படைத்​துள்​ளது. மகளிர் சுயஉதவி குழுக்​களின் பொருளாதார தேவையை கருத்தில் கொண்டு, அவற்​றின் செயல்​பாடு​களுக்​காக தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் சார்​பில் வங்கி கடன் இணைப்​பு​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

அந்த வகை​யில், கடந்த 2021-22-ம் நிதி ஆண்​டில் 4.08 லட்​சம் குழுக்​களுக்கு ரூ.21,392 கோடி​யும், 2022-23-ம் நிதி ஆண்​டில் 4.49 லட்​சம் குழுக்​களுக்கு ரூ.25,642 கோடி​யும், 2023-24-ம் நிதி ஆண்​டில் 4.79 லட்​சம் குழுக்​களுக்கு ரூ.30,074 கோடி​யும் வங்கி கடனுதவி​கள் வழங்​கப்​பட்டன. அதை தொடர்ந்​து, கடந்த 2024-25-ம் நிதி ஆண்​டில் 4.84 லட்​சம் குழுக்​களுக்கு ரூ.35,189 கோடி கடன் வழங்கி தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் சாதனை படைத்​தது.

இதன் தொடர்ச்​சி​யாக, நடப்பு 2025-26-ம் நிதி ஆண்​டுக்​கான பட்​ஜெட்​டில், சுயஉதவி குழு மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி வங்கி கடன் இணைப்பு வழங்​கப்​படும் என்று முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​தார். அதன்​படி, நடப்பு ஆண்​டில் கடந்த ஜூலை 18-ம் தேதி வரை 1.04 லட்​சம் சுயஉதவி குழுக்​களை சேர்ந்த 13.58 லட்​சம் மகளிருக்கு ரூ.9,113 கோடி வங்கி கடன் இணைப்​பு​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

அந்த வகை​யில், திமுக அரசு பொறுப்​பேற்ற கடந்த 4 ஆண்​டு​களில் மொத்​த​மாக 19.26 லட்​சம் சுயஉதவி குழுக்​களை சேர்ந்த 2.50 கோடி மகளிருக்கு ரூ.1.21 லட்​சம் கோடி வங்கி கடன் இணைப்​பு​களை வழங்கி தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் சாதனை படைத்​துள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in