அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர் இடங்களை நிரப்பாவிட்டால் கடும் நடவடிக்கை: தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை

அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர் இடங்களை நிரப்பாவிட்டால் கடும் நடவடிக்கை: தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை
Updated on
1 min read

சென்னை: நாடு​முழு​வதும் 700-க்​கும் மேற்​பட்ட மருத்​து​வக் கல்​லூரி​கள் உள்​ளன. அதற்கு அங்​கீ​காரம் அளித்​தல், அதை புதுப்பித்தல் உள்​ளிட்ட நடவடிக்​கைகளை தேசிய மருத்​துவ ஆணை​யம் மேற்​கொண்டு வரு​கிறது. கல்​லூரி​களின் அடிப்​படை வசதி​கள், கட்​டு​மானம், கல்வி சார்ந்த நடவடிக்​கைகள், ஆராய்ச்​சிகள், ஆய்வக வசதி​கள், மருத்​து​வ​மனை கட்​டமைப்பு உள்​ளிட்​ட​வற்​றின் அடிப்​படை​யில் அங்​கீ​காரம் வழங்​கப்​படு​கிறது.

அதே​போல், மருத்​துவ கல்​லூரி​கள் மற்​றும் அதனுடன் ஒருங்​கிணைந்த மருத்​து​வ​மனை​களில் மருத்​து​வர்​கள், மருத்​து​வப் பேராசிரியர்​களின் வரு​கையை பதிவு செய்ய ஆதா​ருடன் கூடிய பயோமெட்​ரிக் முறை கடைப்​பிடிக்​கப்​படு​கிறது. குறைந்​த​பட்​சம் பேராசிரியர்​கள், கல்​லூரி அலு​வலர்​களின் வரு​கைப் பதிவு 75 சதவீதம் இருக்க வேண்​டும். அவ்​வாறு இல்​லாத பட்​சத்​தில் அங்​கீ​காரம் புதுப்​பித்​தல், இடங்​களை அதி​கரித்​தல் ஆகிய​வற்​றுக்கு அனு​மதி மறுக்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில், நடப்​பாண்​டில் தமிழகத்​தில் உள்ள அரசு மருத்​துவ கல்​லூரி​களுக்கு அங்​கீ​காரம் அளிப்​ப​தற்​கான ஆய்வை தேசிய மருத்​துவ ஆணைய குழு சமீபத்​தில் மேற்​கொண்​டது. அதில், 36 அரசு மருத்​து​வக் கல்​லூரி​களி​லும் குறை​பாடு​கள் இருப்​பது கண்டறியப்​பட்டு நோட்​டீஸ் வழங்​கப்​பட்​டது.

இதையடுத்​து, இப்​பிரச்​சினைக்கு தீர்வு காணப்​படும் என்று மருத்​துவ கல்​லூரி​களின் டீன்​கள் தனித்​தனியே விளக்க கடிதங்​களை அளித்​திருந்​தனர். அதன் அடிப்​படை​யில், 25 மருத்​துவ கல்​லூரி​களுக்கு நிபந்​தனை அனு​மதி அளிக்​கப்​பட்​டது.

அதே​நேரம், 11 மருத்​துவ கல்​லூரி​களில் போதிய எண்​ணிக்​கையி​லான பேராசிரியர்​கள் இல்​லாத​தால், தனிப்​பட்ட முறை​யில் விளக்​கமளிக்க சுகா​தா​ரத்​துறை செய​லா​ளர் மற்​றும் மருத்​து​வக் கல்வி இயக்​குநரிடம் தேசிய மருத்​துவ ஆணை​யம் அறி​வுறுத்​தி​யிருந்​தது. அவர்​கள் இரு​வரும் பேராசிரியர்​களை நியமிப்​ப​தற்​கான செயல் திட்​டத்தை சமர்ப்​பித்து விளக்​கமளித்​தனர்.

இதையடுத்து அந்த கல்​லூரி​களுக்​கும் நிபந்​தனை அனு​ம​தியை தேசிய மருத்​துவ ஆணை​யம் அளித்​தது. ஆனால், 4 மாதங்​கள் மட்​டுமேஅந்த குறை​பாடு​களை களைவதற்​கான அவகாசம் வழங்​கப்​பட்​டது.

அதன் பின்​னர் மீண்​டும் ஆய்வு நடத்​தப்​படும் எனவும், அப்​போது குறை​பாடு​கள் கண்​டறியப்​பட்​டால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்​றும் தேசிய மருத்​துவ ஆணை​யம் எச்​சரித்​துள்​ளது. அதை கருத்​தில்​கொண்​டு, சுற்​றறிக்கை மூல​மாக சில முக்​கிய அறி​வுறுத்​தல்​களை மருத்​துவ கல்​லூரி​களின் டீன்​களுக்கு மருத்​து​வக் கல்வி இயக்​குநர் வழங்​கி​யுள்​ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in