இந்து மதத்தின் மீது தீராத  வெறுப்பு கொண்டவர் முதல்வர் ஸ்டாலின்: தமிழக பாஜக குற்றச்சாட்டு

இந்து மதத்தின் மீது தீராத  வெறுப்பு கொண்டவர் முதல்வர் ஸ்டாலின்: தமிழக பாஜக குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: இந்து மதத்​தின் மீது தீரா வெறுப்பு கொண்​ட​வர் முதல்​வர் ஸ்டா​லின் என பாஜக மாநில செய்​தித் தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக முன்​னாள் அமைச்​சரும், நாடாளு​மன்ற முன்​னாள் உறுப்​பினரு​மான அன்​வர் ராஜா திமுக​வில் இணைந்​துள்​ளார். அதி​முக தான் அவருக்கு அரசி​யலில் அடை​யாளம் தந்​தது. சட்​டப்​பேரவை உறுப்​பினர், அமைச்​சர், நாடாளு​மன்ற உறுப்​பினர் என்று எத்​தனை உயர் பதவி​களை ஒரு கட்சி தந்​தா​லும், எல்​லா​வற்​றை​யும் விட, தமிழ் மக்​களின் நலனை விட தன் மதமே முக்​கி​யம் என்​ப​தை, திமுக​வில் இணைந்​ததன் மூலம் அன்​வர் ராஜா உறு​திப்​படுத்தி இருக்​கிறார்.

பெற்ற அன்​னையைப் போல, பிறந்த தாய் மதமும் முக்​கி​யம் என்று எவ்​வளவோ எடுத்​துச் சொல்​லி​யும் உணர்​வின்றி இருக்​கும் இந்​துக்​களுக்​கு, தன் கட்​சித்​தாவல் மூலம், செவிட்​டில் அறைந்​தது பாடம் சொல்​லி​யிருக்​கிறார் அன்​வர் ராஜா. இன்​றைய தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், கடந்த 2019 மக்​கள​வைத் தேர்​தலில், தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில், ராம​நாத​புரம் தொகு​தி​யில் போட்​டி​யிட்​டார்.

அப்​போது அதி​முக சார்​பில் தேர்​தல் பொறுப்​பாள​ராக அன்​வர்ராஜா இருந்​தார். ஆனால், அங்குபோட்​டி​யிட்ட திமுக கூட்​டணி வேட்பாளர் வெற்றி பெற மறை​முக​மாக உள்​ளடி வேலை செய்​தார். அனைத்து மத பண்​டிகைகளுக்​கும் வாழ்த்து கூறும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், இந்து மத பண்​டிகைகளுக்கு மட்​டும் வாழ்த்து கூறு​வ​தில்​லை.

அந்த அளவுக்கு இந்து மதத்​தின் மீது தீரா வெறுப்பு கொண்​ட​வர். ஆனால் அவரை தேடி சென்று சரணடைந்​திருக்​கிறார் அன்​வர்​ராஜா. இதன் மூலம், திமுக இந்​துக்​களின் விரோதி என்​ப​தை​யும், தன்​னைப் போன்​றவர்​களின் நண்​பன் என்​ப​தை​யும் குறிப்​பால் உணர்த்தி இருக்​கிறார்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in