ஆடி அமாவாசையை முன்னிட்டு சென்னை - ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு சென்னை - ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Updated on
1 min read

சென்னை: ஆடி அமா​வாசையை முன்​னிட்​டு, சென்னை மற்​றும் பிற இடங்​களில் இருந்து ராமேசுவரத்​துக்கு சிறப்பு பேருந்​துகள் நாளை இயக்​கப்பட உள்​ளன. தமிழகம் மற்​றும் அண்டை மாநில​மான பெங்​களூரில் இருந்து பொது​மக்​கள் ராமேசுவரத்​துக்கு சென்று, தங்​களின் முன்​னோர்​களுக்கு தர்ப்​பணம் மற்​றும் திதி வழங்​கு​வார்​கள். இதன்​படி, ஆடி அமா​வாசை தினத்​தில் ராமேசுவரத்துக்கு அதிக அளவில் மக்​கள் செல்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதன் அடிப்​படை​யில், சென்​னை, சேலம், ஈரோடு, திருப்​பூர், கோயம்​புத்​தூர், பெங்​களூரு ஆகிய இடங்​களில் இருந்து ராமேசுவரத்துக்கு நாளை (ஜூலை 23) கூடு​தல் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளன. மறு​மார்க்​க​மாக, ராமேசுவரத்​தில் இருந்து சென்​னை, சேலம், கோயம்​புத்​தூர், பெங்​களூருக்கு கூடு​தல் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளன.

இரு​மார்க்கத்​தி​லும் சேர்த்து மொத்​தம் 150 சிறப்​புப் பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளன. இதற்​காக, www.tnstc.in மற்​றும் tnstc official app மூலமாக முன்​ப​திவு செய்து பயணிக்க வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த சிறப்பு பேருந்​துகள் இயக்​கத்தை கண்​காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலை​யங்​களில் போதிய அலு​வலர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இத்​தகவல் அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண்மை இயக்​குநர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in