Published : 05 Jul 2018 03:32 PM
Last Updated : 05 Jul 2018 03:32 PM

அமித் ஷாவின் வருகை திருப்புமுனையை ஏற்படுத்தும்: தமிழிசை பேட்டி

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இன்று (வியாழக்கிழமை) தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அதன் விவரம்:

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகை குறித்து சொல்லுங்கள்...

அமித் ஷாவின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். தாமரை மலராது, தமிழக பாஜகவில் என்ன இருக்கிறது என்று சொல்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிகழ்ச்சியாக அமையும்.

பாஜக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் கட்சி. பல எம்எல்ஏக்களைப் பெற்று தோல்வியடைந்த கட்சி போல் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சவாலான சூழ்நிலையில் அடிமட்டத் தொண்டர் வரை கட்சியை எவ்வளவு எடுத்துச் சென்றிருக்கிறோம் என தேசியத் தலைவர் உணர்ந்திருக்கிறார்.

 40 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களைச் சந்தித்திருக்கிறேன். தமிழக அளவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பேசப்படும் நிகழ்ச்சியாக இருக்கும். பணம் கொடுத்து யாரையும் அழைத்து வர மாட்டோம். 5 வாக்குச்சாவடிகளில் பணி செய்துகொண்டிருக்கும் எங்கள் நிர்வாகிகளை மட்டுமே அழைத்திருக்கிறோம். தமிழகத்தில் வேறு கட்சிகளால் இதனைச் செய்ய முடியாது.

யாரை வேண்டுமானாலும் அழைத்துக் கூட்டத்தைக் கூட்டுவது எங்கள் நோக்கமல்ல. வெளித் தோற்றத்திற்காக அல்ல. கட்சியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ளும் மாபெரும் நிகழ்ச்சி. அந்த நிர்வாகிகள் ஈசிஆர் கோல்டன் பீச் ரிசார்ட்டில் தேசியத் தலைவர் அமித் ஷாவைச் சந்திக்கின்றனர்

அமித் ஷா வருகையின்போது கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை இருக்குமா?

இது கட்சி ரீதியான கூட்டம் மட்டும் தான். அரசியல் ரீதியான கூட்டம் அல்ல. அதனால் கட்சி ரீதியான விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் மட்டுமே இருக்கும். அமைப்பு ரீதியான பலம் இருந்தால் தான் அரசியலை சந்திக்க முடியும். அதனால் அந்த அஸ்திவாரத்தைப் பலம் பொருந்தியதாக மாற்றிக்கொண்டு இருக்கிறோம்.

கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும்?

நாடாளுமன்றத் தேர்தலுக்கென ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவில் உள்ள 11 பேருக்கும் ஒவ்வொரு பணி கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசியல் சூழ்நிலையை ஆராய்ந்து அறிக்கை கொடுப்பது, எதிர்க்கட்சிகளின் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து அக்குழு கலந்தாலோசிக்கும். அதன்பின்பு தான் வியூகங்கள் வகுக்கப்படும்.

பாஜகவின் பலம், பலவீனமாக எதைப் பார்க்கிறீர்கள்?

பலம் அமைப்பு ரீதியான வேலை. எங்கள் கூட்டத்திற்கு ஒருவர் வந்தாலும் அது 1000 பேரின் வேலை. கொள்கைப் பிடிப்புள்ள தொண்டர்கள் தான் எங்கள் பலம்.

சினிமா மேஜிக்னு சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது” - கவுதம் கார்த்திக்

கவுதம் கார்த்திக் பேட்டி 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x