மீண்டும் தேர்தல் களத்துக்கு வரும் இபிஎஸ்ஸின் வலது கரம்! - சேலத்தில் 3 தொகுதிகளை குறிவைக்கும் இளங்கோவன்

மீண்டும் தேர்தல் களத்துக்கு வரும் இபிஎஸ்ஸின் வலது கரம்! - சேலத்தில் 3 தொகுதிகளை குறிவைக்கும் இளங்கோவன்
Updated on
2 min read

அதிமுக ஆட்சியில் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் தமிழ்நாடு மாநில வங்கியின் தலைவராகவும் இருந்தவர் சேலம் ஆர்.இளங்கோவன். எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமாக சித்தரிக்கப்படும் இவர் மீது திமுக-வுக்கு எப்போதும் ஒரு கண் உண்டு. இந்தச் சூழலில், 2026-ல் இளங்கோவன் தான் போட்டியிடுவதற்கான தொகுதியை தயார்படுத்தி வருவதாக சேலம் அதிமுக வட்டாரத்தில் பலமான பேச்சு கிளம்பி இருக்கிறது.

2011 தொடங்கி கடந்த மூன்று தேர்​தல்​களாக சேலம் மாவட்​டத்​தில் அதி​முக கூட்​டணி தான் பெரு​வாரி​யான வெற்​றிகளை குவித்து வரு​கிறது. கடந்த முறை, மொத்​தம் உள்ள 11 தொகு​தி​களில் ஒரே ஒரு தொகு​தி​யில் மட்​டுமே திமுக வென்​றது. எஞ்​சிய 10 தொகு​தி​களை அதி​முக கைப்​பற்​றியதற்கு முழு​முதற் காரணம் எடப்​பாடி பழனி​சாமி​யும் சேலம் இளங்​கோவனும் தான். ஜெயலலிதா மறைவுக்​குப் பிறகு இபிஎஸ் முதல்​வ​ரான போது அதன் பின்​னணி​யில் இருந்து அனைத்து ‘செட்​டில்​மென்ட்​’களை​யும் கவனித்​துக் கொண்​ட​வர் இளங்​கோவன் தான்.

அதற்கு கைம்​மாறாக, தன்​னிடம் இருந்த சேலம் புறநகர் மாவட்​டச் செய​லா​ளர் பதவியை அவருக்கு வழங்​கி​னார் இபிஎஸ். ஒரு​வேளை, இளங்​கோவன் அப்​போது எம்​எல்​ஏ-​வாக இருந்​திருந்​தால் அவரை அமைச்​ச​ராகக் கூட ஆக்கி இருப்​பார். ஆனால், அது நடக்​க​வில்​லை. இந்த நிலை​யில் தான் இன்​னொரு வாய்ப்​பைத் தவற​விட்​டு​விடக் கூடாது என்​ப​தற்​காக இம்​முறை இளங்​கோவன் தேர்​தலில் குதிக்க தயா​ராகி வரு​வ​தாகச் சொல்​கி​றார்​கள் சேலம் அதி​முக-​வினர்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய அவர்​கள், “2021-லேயே இளங்​கோவனுக்கு தேர்​தலில் போட்​டி​யிடும் வாய்ப்பு அமைந்​தது. ஆனால், முதல்​வர் வேட்​பாள​ராக இபிஎஸ் மாநிலம் முழுக்க பிரச்​சா​ரம் செய்ய வேண்டி இருந்​த​தால், சேலத்​தில் அவர் இருந்து செய்​து​முடிக்க வேண்​டிய வேலை​களை எல்​லாம் இளங்​கோவன் தான் கவனித்​துக் கொண்​டார். அதனால், இளங்​கோவன் தேர்​தலில் போட்​டி​யிட​வில்​லை. இப்​போது சேலம் மாவட்ட அதி​முக-வையே தனது கைக்​குள் வைத்​திருக்​கும் இளங்​கோவன், அந்த தைரி​யத்​தில் துணிந்து தேர்​தல் களத்​துக்கு வரு​கி​றார்.

2006-ல் பனமரத்​துப்​பட்டி தொகு​தி​யில் போட்​டி​யிட்டு தோற்​றவர் தான் இளங்​கோவன். அதன் பிறகு அவருக்கு தேர்​தல் வாய்ப்பு அமைய​வில்​லை. தொகுதி மறு சீரமைப்​பில் பனமரத்​துப்​பட்​டி, தலை​வாசல் தொகு​தி​கள் நீக்​கப்​பட்​டு​விட்​டன. கெங்​கவல்​லி, ஆத்​தூர், ஏற்​காடு தொகு​தி​கள் ரிசர்வ் தொகு​தி​கள். இவை தவிர, எடப்​பாடி, சங்​ககிரி, மேட்​டூர், வீர​பாண்​டி, சேலம் மேற்​கு, வடக்​கு, தெற்​கு, ஓமலூர் ஆகிய தொகு​தி​கள் உள்​ளன. இதில் சேலம் தெற்கு தவிர, மற்ற தொகு​தி​களில் பெரும்​பான்​மை​யாக உள்ள சமூகத்​தைச் சேர்ந்​தவர்​களையே வேட்​பாள​ராக நிறுத்​து​வதை அனைத்​துக் கட்​சிகளும் வழக்​க​மாக வைத்​துள்​ளன.

இளங்கோவன் தனது முதல் விருப்பமாக சேலம் தெற்கு தொகுதியைத்தான் தேர்வு செய்து வைத்திருக்கிறார். மேட்டூர் தொகுதியில் யார் போட்டியிட்டாலும் வெற்றிபெறும் அளவுக்கு அங்கேயும் அதிமுக வலுவாக இருக்கிறது. அதனால் மேட்டூர் தொகுதியும் அவரது இன்னொரு சாய்ஸாக இருக்கிறது.

மாவட்டத்தின் மற்ற தொகுதிகளில் 50 வாக்காளர்களுக்கு ஒரு பூத் கமிட்டியை அமைத்திருக்கும் இளங்கோவன், மேட்டூர் தொகுதியில் 20 முதல் 30 பேருக்கு ஒரு பூத்கமிட்டியை அமைத்திருக்கிறார். புறநகர் மாவட்டத்தில் கட்சியின் துணை அமைப்புகளில் மேட்டூர் தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கே பொறுப்புகளை வாரி வழங்கி இருக்கிறார். ஒருவேளை, கூட்டணி கட்சிகளுக்காக இந்த இரண்டு தொகுதிகளையும் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் வந்தால் வீரபாண்டியையும் இன்னொரு சாய்ஸாக வைத்திருக்கிறார் இளங்கோவன்” என்றனர்.

இளங்​கோவன் தனக்​கான தொகு​தியை தேடிக் கொண்​டிருப்​பது ஒரு​புறமிருக்க, தங்​களுக்கு சீட்​டுக்​காக சிபாரிசு செய்​யக் கோரி சேலம் மாவட்​டம் மட்​டுமல்​லாது வெளி​மாவட்ட அதி​முக-​வினரும் அவரது வீட்​டில் தவம் கிடந்​து​விட்​டுப் போகிறார்​களாம்​!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in