வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை

பண்ருட்டி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டின் முன் திரண்ட ஆதரவாளர்கள். (உள்படம்) சத்யா பன்னீர்செல்வம்.
பண்ருட்டி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டின் முன் திரண்ட ஆதரவாளர்கள். (உள்படம்) சத்யா பன்னீர்செல்வம்.
Updated on
1 min read

விருத்தாசலம்: கடலூர் மாவட்​டம் பண்​ருட்டி சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் கடந்த 2016-21 வரை எம்​எல்​ஏ​வாகப் பதவி வகித்​தவர் சத்யா பன்​னீர்​செல்​வம். அதே காலத்​தில் அவரது கணவ​ரான பன்​னீர்​செல்​வம் நகர்​மன்​றத் தலை​வ​ராக இருந்​தார்.

பன்​னீர்​செல்​வம் நகர்​மன்​றத் தலை​வ​ராக பதவி வகித்த காலத்​தில் வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்த வழக்​கில் கடந்த ஆண்டு பிப்​ர​வரி மாதம் அவரது வீட்​டில் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் சோதனை நடத்​தினர். அதன் பின்​னர் கட்​சிப் பணி​களில் தீவிர​மாக சத்யா பன்​னீர்​செல்​வம் ஈடு​பட்டு வந்​தார். அவருக்கு அதி​முக மாநில மகளிரணி துணைச் செய​லா​ளர் பதவி வழங்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், ‘தமிழகத்தை மீட்​போம் மக்​களைக் காப்​போம்’ என்ற பிரச்​சா​ரப் பயணம் மேற்​கொண்​டுள்ள அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கடந்த 13-ம் தேதி பண்​ருட்​டிக்கு வந்​த​போது, பெரும் கூட்​டத்​தைக் கூட்டி அவரது பாராட்​டைப் பெற்​றார்.

இச்​சூழலில் நேற்று அதி​காலை கள்​ளக்​குறிச்சி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்​ய​ராஜ் தலை​மையி​லான 15 போலீ​ஸார் சத்யா பன்​னீர்​செல்​வத்​தின் வீட்​டுக்​குச் சென்​று, வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்த வழக்​கில் சோதனை நடத்​தினர். சோதனை​யின்​போது திடீரென சத்யா பன்​னீர்​செல்​வம் மயங்கி விழுந்​தார். பின்​னர் அவரை மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in