‘தமிழ்நாடு நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்’ - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

‘தமிழ்நாடு நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்’ - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு நாள் தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘ தமிழ்நாடு நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள். ஜூலை 18, 1967: திமுக எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது.

தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள்.

அதுவரை இல்லாத சிறப்பாய்த் தாய்நிலத்துக்குத் தலைமகன் பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டி 'தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு' என மூன்று முறை பேரவையில் முழங்க, மேசையொலிகள் விண்ணதிர்ந்த இந்நாள்தான் தமிழ்நாடு நாள்’ எனத் தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in