‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை 77 லட்சத்தை தாண்டியதாக முதல்வர் ஸ்டாலின் தகவல்

‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை 77 லட்சத்தை தாண்டியதாக முதல்வர் ஸ்டாலின் தகவல்
Updated on
1 min read

சென்னை: 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அதிகபட்சமாக, கரூர் மாவட்டக் கழகத்தினர் 41% வாக்காளர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து முன்னணி வகிக்கின்றனர்' என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய விருப்பமுள்ளதா என்று கேட்கும்போது, “அரசின் திட்டங்கள் அன்றாட வாழ்விலும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பயனளிக்கிறது.

அதேசமயம் அ.தி.மு.க. - பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டு என்பது கூட்டணியல்ல; தமிழ்நாட்டை - தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைத்து, மீண்டும் நூறாண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளுவதற்கான சதித் திட்டம் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்” என்று தெளிவாக எடுத்துச் சொல்லி ‘ஓரணியில் தமிழ்நாடு’ என இணைகின்றனர் தமிழ்நாட்டு மக்கள்.

இந்த முன்னெடுப்பைக் கண்காணிப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் திமுக ஐடி விங் அமைத்துள்ள வார் ரூம் (War Room)-ஐ திறந்து வைத்தேன். விறுவிறுவென நடைபெற்று வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க, கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

அதிகபட்சமாக, கரூர் மாவட்டக் கழகத்தினர் 41% வாக்காளர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து முன்னணி வகிக்கின்றனர். அவர்களை முந்தும் வகையில் பிற மாவட்டக் கழகத்தினரும் மும்முரம் காட்டிடக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in