

செங்கல்பட்டு அடுத்த திருவடிசூலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (29). இவர் பிளம்பிங் வேலை செய்து வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு சென்று திரும்பும் போது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெகதீசன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.