Published : 06 Jul 2025 01:06 AM
Last Updated : 06 Jul 2025 01:06 AM

2-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை

முழு கொள்ளளவான 120 அடியை 2-வது முறையாக நேற்று எட்டிய நிலையில் கடல்போல காட்சியளிக்கும் மேட்டூர் அணை.

மேட்டூர் / தருமபுரி: மேட்​டூர் அணை நடப்​பாண்​டில், 2-வது முறை​யாக முழு கொள்​ளள​வான 120 அடியை எட்டி நிரம்​பியது.

கர்​நாட​கா​வில் பெய்த கனமழை​யால் கபினி, கேஆர்​எஸ் அணை​கள் நிரம்​பி, உபரிநீர் திறக்​கப்​பட்​டது. இதனால் மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்து ஜூன் 29-ம் தேதி அணை முழு கொள்​ளள​வான 120 அடியைஎட்​டியது. தொடர்ந்து அணைக்கு வந்த நீர் முழு​வதும் காவிரி​யில் வெளி​யேற்​றப்​பட்​டது. இதனால் காவிரிக் கரையோர மாவட்​டங்​களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், அணைக்​கான நீர்​வரத்து சரிந்து கடந்த 3-ம் தேதி நீர்​மட்​டம் 119.91 அடி​யாக குறைந்​தது. இதற்​கிடை​யில், கர்​நாடக அணை​களில் இருந்து உபரி நீர் திறப்பு மீண்​டும் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்து நேற்று மாலை நீர்மட்டம் 120 அடியை எட்​டியது. நடப்​பாண்​டில் 2-வது முறை​யாக அணை நிரம்​பி​உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. அணைக்கு நேற்று மாலை நீர்​வரத்து 51,501 கனஅடி​யாக இருந்​தது. அணை​யில் இருந்து 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளி​யேற்​றப்​படு​கிறது.

ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நேற்று நீர்​வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி​யாக இருந்​தது. இதனால் ஆறு மற்​றும் அரு​வி​யில் குளிக்​க​வும், பரிசல் இயக்​க​வும் மாவட்ட நிர்​வாகம்​ அறிவித்​துள்​ள தடை தொடர்​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x