Published : 06 Jul 2025 01:00 AM
Last Updated : 06 Jul 2025 01:00 AM

அஜித்குமார் கொலை வழக்கு: சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பியிடம் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை

திருப்புவனம் நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் விசாரணையை முடித்துவிட்டு புறப்பட்ட மதுரை மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ்.

திருப்புவனம்: கோ​யில் காவலாளி அஜித்​கு​மார் கொலை வழக்கு தொடர்​பாக சஸ்​பெண்ட் செய்​யப்​பட்ட டிஎஸ்பி மற்​றும் சம்​பவத்​தன்று பணி​யில் இருந்த போலீ​ஸார், காவல் ஆய்​வாளர், சிவகங்கை ஏடிஎஸ்பி உள்​ளிட்​டோரிடம் மதுரை மாவட்ட நீதிபதி நேற்று விசா​ரணை நடத்​தி​னார்.

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரம் பத்​ர​காளி​யம்​மன் கோயில் காவலா​ளி​யாக இருந்​தவர் அஜித்​கு​மார் (27). நகை திருட்டு புகார் தொடர்​பாக இவரை விசா​ரித்த தனிப்​படை போலீ​ஸார் தாக்​கிய​தில் கடந்த ஜூன் 28-ம் தேதி உயி​ரிழந்​தார். இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வு, மதுரை மாவட்ட 4-வது நீதி​மன்ற நீதிபதி ஜான்​சுந்​தர்​லால் சுரேஷை விசா​ரித்​து, அறிக்கை தாக்​கல் செய்​யு​மாறு உத்​தர​விட்​டது.

இதையடுத்​து, கடந்த 2-ம் தேதி முதல் திருப்​புவனம் நெடுஞ்​சாலைத் துறை ஆய்வு மாளி​கை​யில் தங்​கி​யிருந்து நீதிபதி விசா​ரணையை நடத்தி வரு​கிறார். முதல் 3 நாட்​கள் நடந்த விசா​ரணை​யின்​போது, ஆட்டோ ஓட்​டுநர் அருண்​கு​மார், கோயில் அலு​வலர் பெரிய​சாமி, போலீ​ஸார் அஜித்​கு​மாரை தாக்​கியது தொடர்​பான வீடியோவை உயர் நீதி​மன்​றத்​தில் வழங்​கிய கோயில் பணி​யாளர் சக்​தீஸ்​வரன், கோயில் பணி​யாளர்​கள் பிரபு, கார்த்​திக் ராஜா, அஜித்​கு​மாரின் தாயார் மால​தி, அவரது சகோ​தரர் நவீன்​கு​மார், திருப்​புவனம் அரசு மருத்​து​வ​மனை மருத்​து​வர் கார்த்​தி​கேயன், ஆட்டோ ஓட்​டுநர் அய்​ய​னார், அஜித்​கு​மாரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த மதுரை அரசு மருத்​து​வ​மனை மருத்​து​வர்​கள் சதாசிவம், ஏஞ்​சல் உள்​ளிட்​டோரிடம் நீதிபதி விசா​ரணை நடத்​தி​னார்.

நான்​காவது நாளான நேற்று காலை நீதிபதி ஜான்​சுந்​தர்​லால் சுரேஷ் திருப்​புவனம் காவல் நிலை​யத்​துக்கு சென்று 40 நிமிடங்​கள் விசா​ரணை நடத்​தி​னார். அஜித்​கு​மார் மீதான நிகி​தா​வின் புகார் மனு, அந்​தப் புகாரை பதிவு செய்த ஆவணத்தை ஆய்வு செய்த அவர், சம்​பவத்​தன்று பணி​யில் இருந்த போலீ​ஸாரிடம் விவரங்​களைக் கேட்​டறிந்​தார். பின்​னர், நெடுஞ்​சாலைத் துறை ஆய்வு மாளி​கைக்கு வந்த நீதிப​தி, சிவகங்கை ஏடிஎஸ்பி சுகு​மாறனிடம் விசா​ரித்​தார்.

தொடர்ந்​து, திருப்​புவனம் காவல் ஆய்​வாளர் ரமேஷ்கு​மார், சிறப்பு எஸ்​.ஐ. சிவக்​கு​மார், அன்று பணியி​லிருந்த போலீஸ்​காரர் இளை​ய​ராஜா ஆகியோரிடம் தனித்​தனி​யாக விசா​ரித்​தார். இதையடுத்​து, பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்​முகசுந்​தரத்​திடம் காலை 11 மணி முதல் பிற்​பகல் 2 மணி வரை தீவிர வி​சா​ரணை நடத்​தி​னார்​. இன்​றும்​ வி​சா​ரணை நடை​பெற உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x