Published : 06 Jul 2025 12:00 AM
Last Updated : 06 Jul 2025 12:00 AM

“திமுக ஆட்​சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை” - இபிஎஸ் விமர்சனம்

சென்னை ராயப்பேட்டையில் உள்்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ‘புரட்சி தமிழரின் எழுச்​சிப் பயணம் - மக்​களை காப்​போம் - தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சார சுற்​றுப்​பயணத்தையொட்டி இலச்சினை மற்றும் பாடலை பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்டார்.

சென்னை: தமிழகத்​தில் நடை​பெற உள்ள 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்டு அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி நாளை (ஜூலை 7) கோவை மேட்​டுப்​பாளை​யத்​தில் ‘புரட்சி தமிழரின் எழுச்​சிப்பயணம் - மக்​களை காப்​போம் - தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை தொடங்​கு​கிறார்.இதற்​கான இலட்​சினை மற்​றும் பாடலை, சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள அதி​முக தலைமை அலு​வல​கத்​தில் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி நேற்று வெளி​யிட்​டார்.

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஜூலை 7-ம் தேதி (நாளை) கோவை​யில் இருந்து சுற்​றுப்​பயணத்தை தொடங்​கு​கிறேன். 234 தொகு​தி​களுக்​கும் செல்ல உள்​ளேன். எனது பயணத்​தின் நோக்​கம் திமுக ஆட்​சி​யின் கொடுமையை அம்​பலப்​படுத்தி மக்​களிடம் மாற்​றத்தை ஏற்​படுத்​து​வதுதான். திமுக ஆட்​சி​யில் சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்​கும் பாது​காப்பு இல்​லை. திமுக நிறைவேற்​றாத வாக்​குறு​தி​களை மக்​களிடம் எடுத்து கூற உள்​ளோம். ஸ்டா​லின் ஆட்​சி​யின் வேதனையை பட்​டியலிட்​டு, மக்​கள் விரோத ஆட்​சியை அகற்​று​வோம். இச்​சுற்​றுப்​பயணம் மிகப்​பெரும் மாற்​றத்தை ஏற்​படுத்​தும். 2026 தேர்​தலில் அதி​முக வென்​று, பெரும்​பான்​மை​யுடன் ஆட்சி அமைப்​போம்.

கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு: அந்​தந்த மாவட்ட பிரச்​சினை​களை முன்​னிறுத்தி பேசுவோம். இந்த பிரச்​சார பயணத்​தில் பங்​கேற்க எங்​கள் கூட்​ட​ணி கட்​சிகளுக்கு அழைப்பு விடுத்​துள்​ளோம். மக்​கள் விரோத திமுக ஆட்​சியை எதிர்க்​கும் அனைத்து ஒரு​மித்த கருத்​துடைய கட்​சிகள் இணைந்து தேர்​தலில் கூட்​டணிஅமைத்து போட்​டி​யிட வேண்​டும் என்​பதே எங்​கள் நோக்​கம்.

மத்​திய அமைச்​சர் அமித் ஷா வரு​கை​யின்​போது, ‘அதி​முக தலை​மை​யில் கூட்​ட​ணி, அதி​முக தலை​மை​யில் ஆட்​சி, முதல்​வர் வேட்​பாளர் பழனி​சாமி’ என்று அறி​வித்​து​விட்​டார். இப்​படி அவரே கூறிய பிறகு, மற்ற நிர்​வாகி​கள் யார் பேசி​னாலும் செல்​லாது. நான் சிவகங்கை மாவட்​டத்​துக்கு சுற்​றுப்​பயணம் செல்​லும்​போது அஜித்​கு​மாரின் தாயாரை சந்​திப்​பேன். திமுக​வின் 4 ஆண்டு ஆட்​சி​யில் எங்​கு​ பார்த்​தா​லும் பாலியல் வன்​கொடுமை​கள், கொலைகள், போதை பொருள் விற்​பனை, சட்​டம் ஒழுங்கு அடி யோடு சீர்​கெட்டு விட்​டது.

வீடு​வீ​டாகச் சென்று கதவைத் தட்டி உறுப்​பினர்​களைச் சேர்க்​கும்அளவுக்கு ஸ்டா​லின் தலை​மையி​லான திமுக பரி​தாப​மாகி விட்​டது. வாய்ப்பு இருந்​தால் முதல்​வர் எனது இல்​லத்​துக்கு வர இருப்​ப​தாக தெரி​வித்து இருந்​தார். அதி​முக பெரும்​ பான்​மை​யாக வென்று ஆட்சி அமைத்த பிறகு ஸ்டா​லின் எனது வீட்​டுக்கு வந்​தால் வரவேற்​பேன். இவ்​வாறு அவர் கூறி​னார். இந்​நிகழ்ச்​சி​யில் கட்​சி​யின் துணைப் பொதுச்​செய​லா​ளர்​கள் கே.பி.​முனு​சாமி, நத்​தம் விஸ்​வ​நாதன், பொருளாளர் திண்​டுக்​கல் சீனி​வாசன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

தொண்டர்களுக்கு மடல்: இதனிடையே அதி​முக தொண்​டர்​களுக்கு பழனி​சாமி எழு​தி​யுள்ள மடலில் இடம்​பெற்​றிருப்​ப​தாவது: உங்​கள் ஒவ்​வொரு​வரை​யும் சந்​திக்க உங்​களைத் தேடி வரு​கிறேன். இந்​தப் புரட்​சிப் பயணத்​தில் உங்​களை எல்​லாம் எழுச்​சி மிக்​கவர்​களாக மாற்​று​வது மட்​டுமே எனது நோக்​கம். வெற்​றிகர​மான ஒரு தமிழகத்தை மீண்​டும் உரு​வாக்​கு​வதே இந்​தச் சுற்​றுப் பயணத்​தின் லட்​சி​யம். இது ஒட்​டுமொத்த தமிழ் நாடும் மாற்​றத்தை நோக்கி நடக்​கும் வெற்​றிப் பயணம்.

இந்​தப் பயணப் போர்க்​களத்​தில், ஆளும் கட்​சி​யின் கொடுமை​களை​யும், சிறுமை​களை​யும் எதிர்த்​துப் போராடும் ஒரு சிப்​பா​யாக இருப்​பேன். இந்த ஆட்​சி​யில் விவ​சா​யிகள்,நெச​வாளர்​கள், மீனவர்​கள், சிறுகுறு தொழில் முனை​வோர், தொழிலா​ளர்​கள் என்று அனை​வருமே பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். தொழில் முதலீடு அண்டை மாநிலங்​களுக்கு மாறுகிறது. இந்த அரசு, அனைத்​துத் துறை​களி​லும் தோல்​வியையே கண்​டுள்​ளது. சிறுமிகள் முதல் முதி​ய​வர்​கள் வரை எவரும் தமிழகத்​தில் பாது​காப்​போடு நடமாட முடிய​வில்​லை. விடி​யாத ஆட்​சியை வீட்​டுக்கு அனுப்​புவோம். தீய சக்​தியை வதைத்​திட, நல்​லாட்​சியை விதைத்​திட, வில​காத இருள் வில​கட்​டும்​. தமிழகத்​தில்​ அதி​முக ஆட்​சி மலரட்​டும்​.இவ்​வாறு அவர்​ எழுதியுள்ளார்.

இதற்கிடையே, ‘திமுக ஆட்சியை அகற்ற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பழனிசாமி மறைமுகமாக விஜய்க்குதான் அழைப்பு விடுத் துள்ளார்’ என்று அரசியல் வட் டாரத்தில் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x