அஜித்குமார் சகோதரருக்கு அரசு வேலை வழங்கியது கண்துடைப்பு:​ நயினார் நாகேந்திரன் விமர்சனம்

திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
Updated on
1 min read

திருப்புவனம் / மதுரை: அஜித்​கு​மாரின் சகோ​தரருக்கு அரசு வேலை அளித்​துள்​ளது கண்​துடைப்​பாகும். அவர் இருக்​குமிடத்​திலிருந்து 80 கி.மீ. தொலை​வில் காரைக்​குடி​யில் வேலை கொடுத்​துள்​ளனர் என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார்.

திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தில் போலீ​ஸார் தாக்​குதலில் உயி​ரிழந்த கோயில் காவலாளி அஜித்​கு​மார் குடும்​பத்​தினரை நேற்று சந்​தித்து ஆறு​தல் கூறிய நயி​னார் நாகேந்​திரன், ரூ.5 லட்​சம் நிதி​ உதவி அளித்​தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: திமுக ஆட்​சி​யில் கடந்த 4 ஆண்​டு​களில் 24 விசா​ரணை மரணங்​கள் நடந்​துள்​ளன. எஃப்​ஐஆர் பதிவு செய்​யாமல், அஜித்​கு​மாரை காவல் நிலை​யத்​தில் அடித்​துள்​ளனர். பின்​னர் தனிப்​படை போலீ​ஸார் 2 நாட்​கள் அவரைத் தாக்​கி​யுள்​ளனர். தலை​மைச் செயல​கத்​திலிருந்து ஒரு அதி​காரி சொன்​னார் என்​ப​தற்​காக 6 போலீ​ஸார் சேர்ந்து அடித்​துள்​ளனர். 3 இடங்​களில் சிகரெட்​டால் சுட்​டுள்​ளனர்.

இந்த அளவுக்கு கடுமை​யாக தாக்க வேண்​டிய அவசி​யம் என்ன? மேல​தி​காரி​யின் அழுத்​தம்​தான் காரணம் என்​றால், தலை​மைச் செயல​கத்​திலிருந்து அழுத்​தம் கொடுத்த அதி​காரி பெயரை தமிழக முதல்​வர் வெளிப்​படை​யாக தெரிவிக்க வேண்​டும். இச்​சம்​பவத்தை உடனடி​யாக வெளிக்​கொண்டு வந்​தது பாஜக​தான். அஜித்​கு​மாரின் சகோ​தரருக்கு அரசு வேலை அளித்​துள்​ளது கண்​துடைப்​பாகும். அவர் இருக்​குமிடத்​திலிருந்து 80 கி.மீ. தொலை​வில் காரைக்​குடி​யில் வேலை கொடுத்​துள்​ளனர். 4 கி.மீ. தள்ளி வீட்​டுமனைப் பட்டா கொடுத்​துள்​ளனர். போலீ​ஸார் தாக்​கும் வீடியோ எடுத்த சக்​தீஸ்​வரனுக்கு கொலை மிரட்​டல் வந்​துள்​ளது. அவரது உயிருக்கு பாது​காப்​பில்​லை. இதில் சம்​பந்​தப்​பட்ட அனை​வரை​யும் தண்​டிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

​ஓரணியில் திரள வேண்டும்: மதுரை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நயினார் நாகேந்திரன் நேற்று கூறும்போது, ‘‘தமிழக முதல்​வர் ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ என்​கிறார். இதனால் யாருக்கு என்ன லாபம். யாருக்கு நஷ்டம் என்​பதை மக்​கள் சிந்​தித்துபார்க்க வேண்​டும். தவெக தலை​வர் விஜய் உட்பட திமுக வர வேண்​டாம் என யாரெல்​லாம் நினைக்​கிறார்​களோ, அவர்​கள் ஓரணி​யில் திரள வேண்​டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in