Published : 05 Jul 2025 01:22 AM
Last Updated : 05 Jul 2025 01:22 AM

கொறடா பதவியில் இருந்து பாமக எம்எல்ஏ அருளை மாற்றுமாறு கடிதம்: அவரே நீடிப்பார் என ராமதாஸும் கடிதம் அளிப்பு

பாமக கொறடவாக உள்ள இரா.அருளை அப்பதவியில் இருந்து மாற்றுமாறு பேரவைத் தலைவரிடம் மனு அளிக்க வந்த பாமக எம்எல்ஏக்கள் வெங்கடேசன், சிவக்குமார், சதாசிவம் மற்றும் வழக்கறிஞர் பாலு. (அடுத்த படம்) பேரவை செயலரிடம் மனு அளிக்க வந்த இரா.அருள். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: ​பாமக​வில் இருந்து அக்​கட்சி எம்​எல்ஏ இரா.அருள் நீக்​கப்​பட்​டதை தொடர்ந்து அவர் வகிக்​கும் கொறடா பதவி​யில் இருந்து மாற்​றக்​கோரி பேரவை தலை​வரிடம் அன்​புமணி சார்​பில் கடிதம் வழங்​கப்​பட்​டது.

பாமக நிறு​வனர் ராம​தாஸ், தலை​வர் அன்​புமணி இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது. இதன் ஒருபகு​தி​யாக பாமக சேலம் மாநகர் மாவட்ட செய​லா​ளர் பொறுப்​பில் இருந்து சேலம் மேற்கு தொகுதி எம்​எல்ஏ இரா.அருளை கட்​சி​யின் இணை பொதுச்​செய​லா​ள​ராக ராம​தாஸ் நியமித்​தார். இதையடுத்​து, மாவட்ட செய​லா​ளர் பொறுப்​பில் இருந்து இரா.அருளை நீக்​கிய அன்​புமணி, அந்த பொறுப்​பில் க.சர​வணன் என்​பவரை நியமித்​தார். தொடர்ந்​து, இரா.அருளை கட்​சி​யின் அடிப்​படை உறுப்​பினர் உள்​ளிட்ட அனைத்து பொறுப்​பு​களில் இருந்​தும் நீக்​கி​னார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் பாமக கட்சி தலை​வ​ராக ஜி.கே.மணி​யும், கட்​சி​யின் கொற​டா​வாக இரா.அருளும் உள்​ளனர். இந்​நிலை​யில், நேற்று பாமக உறுப்​பினர்​கள் ச.சிவக்​கு​மார், எஸ்​.பி.வெங்​கடேசன், எஸ்​.ச​தாசிவம் மற்​றும் வழக்​கறிஞர் க.பாலு ஆகியோர் தலைமை செயல​கம் வந்து பேரவை தலை​வர் மு.அப்​பாவுவை சந்​தித்து கொறடா பதவி​யில் இருந்து இரா.அருளை மாற்​றக்​ கோரி​யும், புதிய கொற​டா​வாக ச.சிவக்​கு​மாரை நியமிக்க கோரி​யும் அன்​புமணி அளித்த கடிதத்தை வழங்​கினர்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் வழக்​கறிஞர் பாலு கூறிய​தாவது: கட்​சி​யின் 5 எம்​எல்​ஏக்​களில் பெரும்​பான்மை முடி​வின் அடிப்​படை​யில் இரா. அருளை மாற்​றக்​கோரு​வதை பேரவை தலை​வர் ஏற்​றுக்​கொள்ள வேண்​டும். அவர் விரும்​பி​னாலும்​கூட வேறு முடிவு எடுக்க முடி​யாது. உரிய நடவடிக்கை எடுப்​பார் என்று நம்​பு​கிறோம். அருள் கட்​சி​யில் இருந்து மட்​டுமே நீக்​கப்​பட்​டுள்​ளார். அதன் காரண​மாக அவர் எம்​எல்ஏ பதவி​யில் இருந்து நீக்​கப்பட வேண்​டும் என்​ப​தில்​லை. கட்​சியில் இருந்து நீக்​கப்​பட்​ட​தால் கொற​டா​வாக நீடிக்க முடி​யாது.

அரசி​யல் கட்​சியை பொறுத்​தவரை பொதுக்​குழு​தான் முக்​கிய​மானது. தேர்​தல் ஆணை​யத்​தால் அங்​கீகரிக்​கப்​பட்ட கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி, கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் வடிவேல் ராவணன் ஆகியோர் தான் பொதுக்​குழுவை கூட்ட முடி​யும். கட்​சி​யின் நிறு​வனர் கட்​சி​யின் பொதுக்​குழு, செயற்​குழு கூட்​டங்​களுக்கு அழைக்​கப்​பட்டு அவருடைய வழி​காட்​டு​தலின்​படி முடிவு​கள் மேற்​கொள்​ளப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

ராம​தாஸ் கடிதம்: இதைத்​தொடர்ந்​து, அருள், பேரவை செயலர் அலு​வல​கத்​தில் ஒரு கடிதத்தை அளித்​தார். பாமக நிறு​வனர் ராம​தாஸ் எழு​திய அக்​கடிதத்​தில், “பேர​வை​யில் பாமக உறுப்​பினர்​கள் 5 பேர் உள்​ளனர். கட்​சி​யின் கொற​டா​வாக சேலம் மேற்கு தொகுதி எம்​எல்ஏ இரா.அருள் செயல்​பட்டு வரு​கிறார். பேரவை கால அவகாசம் உள்ள வரை அவரே கொற​டா​வாக நீடிப்​பார். செயல்​படு​வார்” என்று தெரி​வித்​துள்​ளார்.

பின்​னர், இரா.அருள் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “கட்​சி​யின் தலை​வர் ராம​தாஸ் தான். அன்​புமணி செயல் தலை​வர். என்னை நீக்​கும்​ அதி​காரம்​ ராம​தாஸுக்​கு தான்​ உள்​ளது” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x