Published : 03 Jul 2025 05:42 AM
Last Updated : 03 Jul 2025 05:42 AM

சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.19.44 கோடியில் 13 கால்நடை காப்பகம் கட்டும் பணி தீவிரம்

சென்னை: சென்​னை​யில் ரூ.19.44 கோடி​யில் 13 கால்​நடை காப்​பகங்​கள் கட்​டும் பணி​கள் தீவிர​மாக நடை​பெற்று வரு​வ​தாக மாநகராட்சி தெரி​வித்​துள்​ளது. சென்னை மாநக​ராட்சி பகு​தி​களில் பொது​மக்​களுக்​கும், போக்​கு​வரத்​துக்​கும் இடையூறாக தெருக்கள் மற்​றும் சாலைகளில் சுற்​றித்​திரி​யும் மாடு​களைக் கட்​டுப்​படுத்​தும் வகை​யில், ஒவ்​வொரு மண்​டலத்​துக்​கும் ஒரு கால்​நடை காப்பகம் அமைக்க மூலதன நிதி​யின் கீழ் ரூ.19.44 கோடி​யில் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு அதற்​கான பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

அதன்​படி திரு​வொற்​றியூர் - டி.பி.பி.​சாலை, மணலி - செட்​டிமேடு, மாதவரம் - சிஎம்​டிஏ லாரி முனை​யம், தண்​டை​யார்​பேட்டை - செல்​ல​வாயல், ராயபுரம் - பேசின் பாலச் சாலை மற்​றும் மூர்​மார்க்​கெட், அண்​ணாநகர் - செனாய் நகர், தேனாம்​பேட்டை - பீட்​டர்ஸ் சாலை, கோடம்​பாக்​கம் - காந்தி நகர், வளசர​வாக்​கம் - நொளம்​பூர், யூனியன் சாலை, ஆலந்​தூர் - பி.​வி.நகர், பெருங்​குடி - வீர​பாண்​டிய கட்​டபொம்​மன் குறுக்​குத் தெரு மற்​றும் தாம்​பரம் - வேளச்​சேரி பிர​தான சாலை, சோழிங்​கநல்​லூர் - பயோ சிஎன்ஜி நிலை​யம் என 13 கால்​நடை காப்​பகங்​கள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன.

இதில் ராயபுரம், பேசின் பிரிட்ஜ் சாலை​யில் ரூ.1.30 கோடி மதிப்​பீட்​டில் கட்டி முடிக்​கப்​பட்ட கால்​நடை காப்​பகத்தை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின்கடந்த ஜூன் 11-ம் தேதி திறந்து வைத்​தார். இந்த கால்​நடை காப்​பக​மானது கால்​நடை மருத்து​வர் அறை, பராமரிப்​பாளர் அறை, கட்​டுப்​பாட்டு அறை, மருந்​துகள்வைப்பு அறை, 12 கண்காணிப்​பு கேம​ராக்​கள் உள்​ளிட்ட பல்​வேறு வசதி​களு​டன் 240 கால்​நடைகளை பராமரிக்​கும் வகை​யில் கட்​டப்​பட்​டுள்​ளது.

இங்கு ஒரு கால்நடைக்கு நாளொன்றுக்கு ரூ.10 பராமரிப்​புக் கட்​ட​ண​மாக வசூலிக்க நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதர மண்​டலங்​களில் நடை​பெறும் கால்​நடை காப்​பகங்​கள் கட்​டும் பணிகளும் விரை​வில் முடிக்​கப்​பட்​டு, கால்​நடை காப்​பகங்​கள் பயன்​பாட்​டிற்​கு கொண்​டு வரப்​படும்​ என மாநக​ராட்​சி தெரி​வித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x