Published : 02 Jul 2025 05:48 AM
Last Updated : 02 Jul 2025 05:48 AM

ஆளுநர் ரவி டெல்லி பயணம்

சென்னை: ஆளுநர் ஆர்​.என்​.ரவி 4 நாட்​கள் பயண​மாக நே;ற்று டெல்லி புறப்​பட்​டுச் சென்​றார். அவர் இன்று அல்​லது நாளை மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்​ஷாவை சந்​திக்க உள்​ள​தாக கூறப்​படு​கிறது. தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ர​வி​யின் பதவிக்​காலம் முடிந்​து​விட்ட நிலை​யில், பதவி நீட்​டிப்பு செய்​யப்​பட​வில்​லை.

விதி​கள்​படி புதிய ஆளுநர் பதவி​யேற்​கும்​வரை, ஏற்​கெனவே உள்ள ஆளுநர் தொடரு​வார் என்​ப​தால், அவர் ஆளுந​ராக உள்​ளார். இதனிடையே, தமிழக அரசுக்​கும் ஆளுநருக்​கும் மோதல் போக்கு நீடித்து வரு​வ​தால், அடிக்​கடி ஆளுநர் டெல்லி சென்று வரு​கிறார். கடந்த மாதம் 26-ம் தேதி ஒரு நாள் பயண​மாக ஆளுநர் டெல்லி சென்​று​விட்டு வந்​தார்.

இந்​நிலை​யில், மீண்​டும் 4 நாட்​கள் பயண​மாக நேற்று காலை சென்​னை​யில் இருந்து டெல்லி சென்​றார். ஆளுநரின் திடீர் டெல்லி பயணம் குறித்து அதி​காரப்​பூர்வ அறி​விப்பு எது​வும் தெரிவிக்​கப்​ப​டாத நிலை​யில், ஒரே வாரத்​தில் 2-வது முறை​யாக 4 நாட்​கள் பயணமாக டெல்லி செல்​வது அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. டெல்​லி​யில் உள்​துறை அமைச்​சரை ஆளுநர் சந்​தித்து தமிழகத்​தின் அரசி​யல் நில​வரம், சட்​டம் - ஒழுங்கு போன்​றவை குறித்து பேச இருப்​ப​தாக​வும்​ கூறப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x