Published : 01 Jul 2025 05:13 AM
Last Updated : 01 Jul 2025 05:13 AM

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்கள்: வரன்முறைப்படுத்த அவகாசம் நீட்டிப்பு

சென்னை: அனு​ம​தி​யற்ற கல்வி நிறுவன கட்​டிடங்​களை வரன்​முறைப்​படுத்த அவகாசம் அளிக்கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: திட்​ட​மில்லா பகு​திகளில் 2011-ம் ஆண்டு ஜன. 1-ம் தேதிக்கு முன்பு கட்​டப்​பட்டு இயங்​கிவரும் அனு​ம​தி​யற்ற கல்வி நிறு​வனக் கட்​டிடங்​களுக்​கு, வரன்​முறைப்​படுத்​தும் திட்​டத்​தின் கீழ், இணை​யதளம் மூலம் விண்ணப்​பிக்க மீண்​டும் ஒரு வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி விண்​ணப்​பிப்​ப​தற்​கான அவகாசம் இன்று (ஜூலை 1) முதல் 2026-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதிவரை ஓராண்​டுக்கு நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

அனு​ம​தி​யற்ற கல்வி நிறுவன கட்​டிடங்​கள் மலை​யிடப் பகு​தி​யில் அமை​யும் பட்​சத்​தில், அதுதொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு வெளி​யிடப்​பட்ட அரசு கடிதத்​தில் குறிப்​பிடப்​பட்​டுள்ள அனைத்து வழி​முறை​களை​யும் பின்​பற்ற வேண்​டும். விண்​ணப்​பிக்க விரும்​புபவர்​கள் https://www.tcponline.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்​ணப்​பிக்​கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x