Last Updated : 30 Jun, 2025 02:51 PM

 

Published : 30 Jun 2025 02:51 PM
Last Updated : 30 Jun 2025 02:51 PM

இடம் தயார், பணமும் தயார்... தீயணைப்பு நிலையம் கட்டுவது எப்போது? - செய்யூர் மக்கள் எதிர்பார்ப்பு

செய்யூர் அருகே புதிய தீயணைப்பு நிலைய கட்டிடம் அமைய உள்ள நிலப்பகுதி.

செய்​யூரில் புதிய தீயணைப்பு நிலைய கட்​டிடத்​துக்கு ரூ.2.10 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், கட்​டு​மான பணி​கள் தொடங்​கப்​ப​டா​மல் உள்​ள​தால், விரை​வாக பணி​களை தொடங்க அதி​காரி​கள் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என சுற்​றுப்​புற கிராம மக்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், செய்​யூர் வட்​டத்​தில் 80-க்​கும் மேற்​பட்ட கிராமங்​கள் மற்​றும் பல்​வேறு வணிக நிறு​வனங்​கள், சிப்​காட் உள்​ளிட்​டவை அமைந்​துள்​ளன. இதனால், மேற்​கண்ட வட்​டத்தை சேர்ந்த பொது​மக்​கள் பல்​வேறு தேவை​களுக்​காக செங்கல்பட்டு, தாம்​பரம், மது​ராந்​தகம், கல்​பாக்​கம் ஆகிய பகு​தி​களை சார்ந்​துள்​ளனர்.

இந்நிலை​யில், மேற்​கண்ட வட்​டத்​துக்கு உட்​பட்ட கிராமங்​களில் தீ விபத்து ஏற்​பட்​டால் தீயை அணைக்​கும் பணி​களில் ஈடு​படு​வதற்​கான, தீயணைப்பு மற்​றும் மீட்பு நிலை​யம், வட்​டாட்​சி​யர் அலு​வல​கம் அருகே பல ஆண்​டு​களுக்கு முன்பு அமைக்​கப்​பட்​டது. இங்கு பல்வேறு வசதிகள் இல்லாததால் நவீன வசதி​களு​டன் கூடிய புதிய தீயணைப்பு நிலைய கட்​டிடம் அமைக்க வேண்​டும் என செய்​யூர் மக்​கள் மற்​றும் தன்​னார்​வலர்​கள் நீண்ட கால​மாக கோரிக்கை விடுத்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், தீயணைப்பு நிலை​யம் அமைப்​ப​தற்​காக செய்​யூரில் 61 சென்ட் நிலம் தேர்வு செய்​யப்​பட்​டது. ஆனால், நிலம் ஒதுக்​கி​யும் புதிய கட்​டிடங்​கள் அமைக்க நிதி ஒதுக்​கு​வ​தில் தாமதம் ஏற்​பட்​ட​தால், கட்​டிடம் அமைக்​கும் பணி​கள் கிடப்​பில் இருந்​தன.

இந்​நிலை​யில், புதிய தீயணைப்பு நிலை​யம் அமைக்க ரூ.2.10 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டதன்​பேரில், கட்​டிடம் அமைக்​கும் பணி​கள் விரை​வில் தொடங்​கும் என அனை​வரும் காத்​திருந்த நிலை​யில், பணி​கள் தொடங்​கப்​ப​டா​மல் உள்​ளது. இதனால், தீயணைப்பு நிலைத்​தின் அவசி​யம் கருதி கட்​டு​மான பணி​களை விரை​வில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என செய்​யூர் சுற்​றுப்​புற கிராம மக்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

இதுகுறித்​து, செய்​யூர் கிராம மக்​கள் கூறிய​தாவது: மேற்​கண்ட தீயணைப்பு நிலை​யத்​தில் பல்​வேறு பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன. எனவே, சுற்​றுப்​புற கிராம மக்​களின் பாது​காப்பு கருதி புதிய கட்​டிடத்​தின் கட்​டு​மான பணி​களை விரை​வாக தொடங்க அதி​காரி​கள் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​றனர். இதுகுறித்​து, தீயணைப்பு மற்​றும் மீட்பு பணி​கள் துறை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: செய்​யூர் தீயணைப்பு நிலை​யத்​தின் புதிய கட்​டிடம் அமைக்​கும் பணி​களை ஒப்​பந்​த​தா​ரரர் விரை​வில் தொடங்க உள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x