Published : 30 Jun 2025 05:50 AM
Last Updated : 30 Jun 2025 05:50 AM

பெண் கல்வி, வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவ வேண்டும்: நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி வேண்டுகோள்

விராட் விஸ்வகர்ம சேவாலயா அறக்கட்டளை சார்பில் சென்னை பெரியார் நகரில் நடைபெற்ற விழாவில் பத்ம விருதுபெற்ற ஸ்தபதி தேவ.ராதாகிருஷ்ணனை கவுரவித்தார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி. உடன், அறக்கட்டளை நிறுவனர் முனைவர் பிரம்மஸ்ரீ கே.பி.வித்யாதரன், விஜயலட்சுமி வித்யாதரன், டாக்டர் வி.விஜயசந்தர் வித்யாதரன், தெய்வநாயகி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்.

சென்னை: ​வி​ராட் விஸ்​வகர்ம சேவாலயா அறக்​கட்​டளை​போல நாம் அனை​வரும் பெண் கல்​வி, ஏழை மகளிர் வாழ்​வா​தார மேம்​பாட்​டுக்கு உதவ வேண்​டும் என்று சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி டி.​வி.தமிழ்ச்​செல்வி கூறி​னார். விராட் விஸ்​வகர்ம சேவாலயா அறக்​கட்​டளை சார்​பில், பத்​மஸ்ரீ விருதுபெற்ற ஸ்த​பதி தேவ.​ரா​தா கிருஷ்ணனுக்கு பாராட்டு விழா சென்னை பெரி​யார் நகரில் நேற்று நடை​பெற்​றது. அறக்​கட்​டளை நிறு​வனர் முனைவர் பிரம்மஸ்ரீ கே.பி.​வித்​யாதரன் தலைமை வகித்​தார்.

சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி டி.​வி.தமிழ்ச்​செல்​வி,ஸ்த​பதி தேவ.​ரா​தாகிருஷ்ணனை கவுர​வித்​தார். தொடர்ந்​து, அறக்​கட்​டளை சார்​பில் ஏராள​மான பெண் பயனாளி​களுக்கு கல்​வி, மருத்​துவ உதவித்​தொகை, கண் கண்​ணாடி, தையல் இயந்​திரங்​களை வழங்​கி​னார்.

பின்​னர் நீதிபதி பேசி​ய​தாவது:விராட் விஸ்​வகர்ம சேவாலயா அறக்​கட்​டளை, பெண் குழந்​தைகள் கல்விக்​காக​வும், ஏழை மகளிர் வாழ்​வா​தார மேம்​பாட்​டுக்​காக​வும் ஆண்​டு​தோறும் ஏராள​மான உதவி​களை செய்து வரு​கிறது. இந்த அறக்​கட்​டளை​போல நாமும் ஏழை பெண்​களின் கல்​வி, வாழ்​வா​தார மேம்​பாட்​டுக்​காக முடிந்த உதவி​களை செய்ய வேண்​டும். ஸ்த​பதி தேவ.​ரா​தாகிருஷ்ணன் வடிவ​மைத்த சிற்​பம் ஜி-20 மாநாட்​டுக்கே பெரு​மையை தேடித்​தந்​தது. அதனாலேயே பத்​மஸ்ரீ விருதும் அவரை தேடிவந்​தது. நமது பண்​பாட்​டை​யும், கலாச்​சா​ரத்​தை​யும் நாம் போற்​றிப் பாது​ காக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

ஜி-20 மாநாட்டில் சிலை: ஸ்த​பதி தேவ.​ரா​தாகிருஷ்ணன் பேசும்​போது, “ஜி-20 மாநாட்​டில் 40 அடி உயரத்​தில் சிலை வைக்க வேண்​டும். அதை பாரம்​பரிய ஸ்த​பதி ஒரு​வர்​தான் செய்ய வேண்​டும் என்று பிரதமர் மோடி விரும்​பி​னார். நான் சிற்ப சாஸ்​திர முறைப்​படி, பாரதம், பாரதப் பிரதமர் என்ற சொற்​களு​டன், 27 அடி உயர நடராஜர் சிலையை அமைக்​கப் பரிந்​துரைத்​தேன்.

அதை பிரதமர் ஏற்​றுக்​ கொண்​டார். அவர், கலைஞர்​களின் தொழில் உரிமை​யை, பாரம்​பரிய நடை​முறை​களை மதிப்​பவர்” என்​றார். அறக்​கட்​டளை நிறு​வனர் கே.பி.​வித்​யாதரன் பேசும்​போது, “முன்பு நல்ல நாள் பார்த்​து, தோப்​புக்​குச் சென்​று, ஆண் மரமா, பெண் மரமா என்று தேர்வு செய்​து, வீடு​களுக்கு மரங்​களை அறுப்​பார்​கள். அதனால்​தான் அந்​தக் காலத்து வீடு​களும், கோயில் கதவு​களும் நீண்​ட​காலம் உறு​தி​யாக இருந்​தன.

அந்த வீடு​களில் வசிப்​போரும் பல தலை​முறை​கள் சிறப்​பாக வாழ்ந்​தனர். இன்று பட்​டறை​யில் கிடைத்த மரங்​களை​யும், ரெடிமேடு கதவு​களை​யும் பயன்​படுத்​துகின்​றனர். திரு​மணத்​துக்கு தாலியை ரெடிமே​டாக வாங்கி அணிந்து கொள்​கின்​றனர். அந்​தக் காலத்​தில் நல்ல நாள், நேரம் பார்த்​து, தங்​கத்தை உருக்கி தாலி செய்​த​தால், அதை வாங்​கு​வோரின் குடும்ப வாழ்க்கை சிறப்​பாக இருந்​தது. எனவே, நமது பாரம்​பரிய மரபு​களை அனை​வரும் கடைபிடிக்க வேண்​டும்” என்​றார். இந்த நிகழ்ச்​சி​யில் தெய்​வ​நாயகி ரா​தாகிருஷ்ணன், விஜய லட்​சுமி வித்​யாதரன், டாக்​டர் வி.விஜயசந்​தர் வித்​யாதரன்​ உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்டனர்.​

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x