Published : 30 Jun 2025 04:56 AM
Last Updated : 30 Jun 2025 04:56 AM

4 ஆண்டுகளில் 63 சிலைகள், 11 மணிமண்டபங்கள் அமைப்பு: தமிழக அரசு பெருமிதம்

​சென்னை: தியாகங்​கள் புரிந்த தீரர்​கள், அறிஞர்​கள், தலை​வர்​களை போற்றி 4 ஆண்​டு​களில் 63 சிலைகள், 11 மணி மண்டபங்களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அமைத்​துள்​ளார் என்று தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக நேற்று தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநிதி ஆற்​றிய பணி​களில் சிறந்த பணி, பல்​லா​யிரக்​கணக்​கான தலை​முறை​களுக்​கும் தனித்​தோங்கி நிற்​கும் பணி, தென்​கோடி குமரி முனை​யில் திரு​வள்​ளுவருக்கு உலகமே கண்டு வியக்​கும் வண்​ணம் 133 அடி உயரத்​தில் 7,000 டன் எடை கொண்ட மாபெரும் கற்​சிலையை ரூ.9 கோடியே 65 லட்​சத்​தில் நிறுவி 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி திறந்து வைத்​தார்.

திரு​வள்​ளுவர் சிலை போல எண்​ணற்ற சிலைகள் மற்​றும் மணிமண்​டபங்​கள் நிறுவி தியாகி​களை போற்​றி​யுள்​ளார். தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், குமரி முனை​யில் திரு​வள்​ளுவர் சிலை நிறு​வப்​பட்டு 25 ஆண்​டு​கள் நிறைவு பெற்​றதை குறிக்​கும் வகை​யில் வெள்ளி விழாவை 2024-ம் ஆண்டு டிசம்​பர் 30, 31-ம் தேதி​களில் மாபெரும் கலை விழா​வாக கொண்​டாடி​னார். திரு​வள்​ளுவர் சிலை​யை, பேரறி​வுச் சிலை என முதல்வர் போற்றி மகிழ்ந்​தார்.

அறிஞர் பெரு​மக்​களின் எழுத்​தாவணங்​களை தொகுத்து வெள்ளி விழா மலர் ஒன்​றை​யும் வெளி​யிட்​டார். திரு​வள்​ளுவரின் சிலை​யை​யும் விவே​கானந்​தர் பாறையை​யும் இணைத்து ரூ. 37 கோடி செல​வில் இந்​தி​யா​விலேயே முதலா​வ​தாகக் கடல் மீது கட்​டப்​பட்​டுள்ள பிரம்​மாண்​ட​மான கண்​ணாடி இழைப் பாலத்தை 2024-ம் ஆண்டு டிசம்​பர் 30-ம் தேதி திறந்து வைத்​தார்.

கருணாநிதி வழி​யில், ஆட்​சியை பார் முழுதும் பாராட்​டும் வண்​ணம் நடத்தி வரும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், இந்​தி​யத் திரு​நாட்​டின் எழுச்​சிக்கு விதை​யாக வித்​தாக அமைந்த சுதந்​திர போராட்ட தியாகி​கள், அன்னை தமிழ் மொழியை காத்​திட ஆரு​யிர்​கள் தந்து போராடிய அற்​புத தியாகி​கள் அனை​வரை​யும் போற்றி பாராட்​டும் பெரு​மைக்​குரிய சின்​னங்​களாக சிலைகளை​யும், மணிமண்​டபங்​களை​யும் தமிழகம் முழு​வ​தி​லும் ஏராள​மாக ஏற்​படுத்தி வரு​கிறார். இவை அனைத்​தும் எதிர்​காலத் தலை​முறை இளைஞர்​களுக்கு நல்​வழி காட்டி உணர்​வூட்​டும் உயிரோ​வி​யங்​களாகும்.

தமிழக முதல்​வ​ராக மு.க.ஸ்​டா​லின் பதவி ஏற்ற நாளில் இருந்து இது​நாள் வரை நாட்​டுக்​காக​வும், தமிழ்​மொழி வளர்ச்​சிக்​காக​வும் பாடு​பட்ட பெரு​மக்​களின் தியாகங்​களை வருங்​கால இளைஞர்​கள் அறிந்து போற்றி பின்​பற்​றும் வண்​ணம் 63 சிலைகள், 11 மணிமண்​டபங்​களை அமைத்​ததுடன் மேலும் 28 தியாகி​களுக்கு சிலைகளும் 12 அரங்​கங்​களும் அமைத்து வரு​கிறார்​கள்.

ஆனால் அதி​முக 10 ஆண்டு கால ஆட்​சி​யில் 25 தியாகி​களுக்​கான சிலைகள் மட்​டுமே அமைக்​கப்​பட்டன என்​பது நினை​வு​கூரத்​தக்​கது. இந்த விவரங்​கள், இந்​திய நாட்​டுக்கே வழி காட்​டும் வகை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நாட்​டுக்கு உழைத்த நல்​லோரை எல்​லாம் போற்றி வரும் மாட்​சிகளை எடுத்​துரைக்​கும்​ சிறந்​த சாட்​சிகள்​ ஆகும்​. இவ்​வாறு அந்த செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்கப்பட்டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x