நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்துக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் இன்று விவசாயிகள் சங்கம் போராட்டம்

நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்துக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் இன்று விவசாயிகள் சங்கம் போராட்டம்
Updated on
2 min read

சென்னை: நிலத்தடி நீருக்கான வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில், மத்திய அரசின் அறிவிப்பு நகலைஎரிக்கும் போராட்டம் இன்று நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நிலத்தடி நீரை முறைப்படுத்தும் வகையில், விவசாயிகள் சாகுபடிக்காக வெளியே எடுக்கும் நீரை அளவீடு செய்து, விவசாயிகளுக்கு வரி விதிக்கும் விதமாக ரூ.1,600 கோடியில் நிலத்தடி நீர் எடுப்பை முறைப்படுத்தும் திட்டம் அமலாக்கப்பட உள்ளதாக மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஹெச்.எம்.பாட்டீல் அறிவித்துள்ளார்.

இது விவசாயிகளுக்கு எதிரான தாக்குதலாகும். தமிழகத்தின் நீர் தேவை அண்டை மாநிலங்களையே நம்பி உள்ளது. தமிழகத்துக்கான நீர் பங்கீடு பாதகமாக உள்ள நிலையில், வேளாண்மை உற்பத்திக்கு அடிப்படையாக இருந்து வருவது நிலத்தடி நீர்தான். தேவைக்கு மேல் விவசாயிகள் எவரும் நிலத்தடி நீரை எடுப்பதில்லை. பயன்பாட்டுக்கு மேலாக நீரை எடுத்தாலும், அதனால் மோட்டார் உள்ளிட்ட மின் சாதன கருவிகள் பழுதாகி வீண் செலவு ஏற்படும் என்பது விவசாயிகளுக்கு தெரியும்.

திரும்ப பெறவேண்டும் நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும் என்ற அக்கறை விவசாயிகளுக்கும் இருக்கிறது. இதை மத்திய அரசு உணர வேண்டும். நீர் நிலைகளை தூர்வார, மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த திட்டங்களை வகுப்பதற்காக நிதியை ஒதுக்கீடு செய்யாமல், விவசாயிகளை குறிவைத்து தாக்கும் வகையில் திட்டங்களை அறிவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நீண்ட போராட்டங்கள், எண்ணற்ற விவசாயிகளின் இறப்புக்கு பின்னர் தான் தமிழகத்தில் கட்டணமில்லா வேளாண் மின்சாரம் அமல்படுத்தப்படுகிறது. அதை துண்டித்திடவே மத்திய அரசின் முன்னேற்பாடு இது. எனவே, மத்திய அரசு இத்திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இதை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் மத்திய அரசின் உத்தரவு நகலை எரிக்கும் போராட்டம் நாளை (இன்று) நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அன்புமணி வலியுறுத்தல்: இதுதொடர்​பாக பாமக தலைவர் அன்புமணி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தியா முழு​வதும் வேளாண்​மைக்​காகப் பயன்​படுத்​தப்​படும் நிலத்​தடி நீருக்கு வரி விதிக்​கும் முறை மாநில அரசுகளு​டன் இணைந்து செயல்​படுத்​தப்பட இருப்​ப​தாக மத்​திய அரசின் நீர்​வளத்​துறை தெரி​வித்​திருக்​கிறது. நிலத்​தடி நீரை பயன்​படுத்​தும் விவ​சா​யிகள் அனுப​வித்து வரும் துயரங்​களை​யும், நெருக்​கடிகளை​யும் புரிந்து கொள்​ளாமல், இப்​படி ஒரு திட்​டத்தை செயல்​படுத்த நீர்வள அமைச்​சகம் திட்​ட​மிடு​வது கண்​டிக்​கத்​தக்​கது.

நிலத்​தடி நீர் வீணாவதைத் தடுக்க அரசு நினைத்​தால், அதுகுறித்து விழிப்​புணர்வு ஏற்​படுத்​து​வதும், நிலத்​தடி நீரை சிக்​க​ன​மாகப் பயன்​படுத்​தும் விவ​சா​யிகளுக்கு வெகும​தி​களைக் கொடுத்து ஊக்​கு​விப்​பதும்​தான் சரி​யான நடவடிக்​கை​யாக இருக்​கும். வரி விதிப்​பது சரி​யான​தாக இருக்​காது.

ஏற்​கெனவே பல வகை​களில் விவ​சா​யிகள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இத்​தகைய நிலை​யில் வேளாண் பயன்​பாட்​டுக்​கான நிலத்​தடி நீருக்கு வரி விதித்து விவ​சா​யிகளை மேலும் நெருக்​கடிக்கு ஆளாக்​கக்கூ​டாது. அத்​தகைய ஆபத்​தான திட்​டத்தை மத்​திய அரசு கைவிட வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in