

ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடக்கிறது. தமிழ்நாட்டில் முதல்முறையாக இந்த ஆண்டு கோவையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை பொது அறிவுத் தாள், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறனறித் தேர்வு (சி-சாட்) நடக்கிறது.
சென்னையில் 61 ஆயிரம் பேர்
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 இடங்களில் முதல் நிலைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. சென்னையில் 145 துணை மையங்களில் 61,003 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் பார்வையற்ற 309 பேருக் காக கோடம்பாக்கம் பதிப்பகச் செம்மல் எம்.கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் சிறப்பு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் பஸ் ரூட் எண்
இந்த ஆண்டு தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் சென்னை யில் சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை 55,059. இந்த ஆண்டு எண்ணிக்கை 61,003. இது கடந்த ஆண்டைவிட 5944 அதிகம். தேர்வர்கள் தேர்வு மையங்களை எளிதில் கண்டறிந்து சென்றடைய வசதியாக, தேர்வு மையங்களுக்கு கோயம்பேடு, சென்ட்ரல், தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து செல்லும் மாநகரப் பேருந்து வழித்தட எண்கள் அரசு தேர்வுத் துறை இணைய தளத்தில் (www.tndge.in) வெளியிடப் பட்டுள்ளன.
தேர்வு மையத்தின் நுழை வாயிலி லேயே, காவல் துறையினர் உதவியு டன் தேர்வர்கள் முழுமையாக பரிசோதிக்கப்படுவார்கள். தடை செய்யப்பட்ட சாதனங்கள் இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் உள்ளே அனுமதிக்கப் படுவர்.
ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வு இதுவரை தமிழ்நாட்டில் சென்னை, மதுரை ஆகிய 2 இடங்களில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல்முறையாக கோவை யிலும் நடத்தப்படுவது குறிப்பிடத் தக்கது. அடுத்தகட்ட தேர்வான மெயின் தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும். இந்த ஆண்டு ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உட்பட 23 விதமான பணிகளில் 1,291 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.