குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு ஆளுநர், முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு ஆளுநர், முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
Updated on
1 min read

சென்னை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது 67-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிடப்பட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் ஆர்.என்.ரவி: எளிமை, பணிவு, ஆழ்ந்த ஞானம் ஆகியவற்றின் உருவகமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திகழ்கிறார். மக்கள் சேவையில் அவர் தழைத்தோங்கி ஆரோக்கியமான ஆயுளுடன் வாழ நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: நல்ல உடல்நலத்துடனும், மன அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் நாட்டின் சேவையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஈடுபட விழைகிறேன்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: நமது நாட்டில் பெண்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டதை குறிக்கும் பிரகாசமான சின்னே குடியரசு தலைவர் திரவுபதி முர்மு. அவர் நாட்டை கருணை, கண்ணியம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் வழிநடத்துகிறார். அவருக்கு நல்ல ஆரோக்கியமும் வலிமையும் தொடர்ந்து கிடைக்க வாழ்த்துகிறேன்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: குடியரசுத் தலைவரின் குறிப்பிடத்தக்க நிர்வாகப் பண்பும், மக்களுடனான ஆழமான தொடர்பும் அவரது சிறந்த தலைமைத்துவத்துக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பிறந்தநாள் கொண்டாடும் குடியரசுத் தலைவர் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழவும். நாட்டு மக்களுக்கான அவரது சேவை தொடரவும் எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in