தமிழகம், புதுவையில் 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்

தமிழகம், புதுவையில் 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்
Updated on
1 min read

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 26-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். சென்னை,புறநகர் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 40-60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

13 நகரங்களில் வெயில் சதம்: நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி, வேலூரில் 104 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், மதுரை மாநகரம், ஈரோடு ஆகிய இடங்களில் தலா 103 டிகிரி, கடலூர், திருச்சி, திருத்தணி, தூத்துக்குடியில் தலா 102 டிகிரி, கரூர் பரமத்தி, பரங்கிப்பேட்டையில் தலா 101 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், தஞ்சாவூரில் தலா 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in