Published : 21 Aug 2014 11:27 AM
Last Updated : 21 Aug 2014 11:27 AM

கூடங்குளம் முதலாவது அணு உலையில் ஒரு வாரத்தில் வணிகரீதியில் மின் உற்பத்தி

`கூடங்குளத்தில் உள்ள முதலா வது அணு உலையில் இன்னும் ஒரு வாரத்தில் வணிகரீதியிலான மின்உற்பத்தி தொடங்கும்’ என்று, நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் கூடங் குளம் அணுமின் நிலையம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை நடத்திய அணு அறிவியல் திருவிழா வில் பங்கேற்ற அவர் செய்தி யாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

“கூடங்குளத்தில் 1,000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுள்ள முதலாவது அணு உலையில் வணிகரீதியில் மின் உற்பத்தியை தொடங்க ஏதுவாக அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் ஒப்புதலுடன் கடந்த 35 நாட்களாக பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டிருந்தன. இந்த ஆய்வுகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருப் பதால், வணிகரீதியில் மின் உற்பத்திக்கு முதலாவது அணு உலை தயார் நிலையில் இருக்கிறது.

வணிக உற்பத்தி

ஆய்வு முடிவுகள் தொடர்பான அறிக்கை அணுசக்தி ஒழுங் கமைப்பு வாரியத்திடம் அளிக்கப் பட்டிருக்கிறது. வாரியத்தின் ஒப்புதல் கிடைத்ததும் இன்னும் ஒருவாரத்தில் வணிகரீதியில் மின் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாவது அணு உலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதியில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்ட மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.1.22 என்று கட்டணம் நிர்ண யிக்கப்பட்டிருந்தது.

வணிகரீதியில் மின் உற்பத்தி தொடங்கியபின் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.3.50 என்ற கட்டணத்தில் விநியோகிக்கப் படும்” என்றார்.

14 நாடுகளின் விஞ்ஞானிகள் வருகை

உலகில் பல்வேறு நாடுகளில் அணு உலைகளை அமைத்து இயக்கிவரும் நாடுகளை உள்ளடக்கிய டபிள்யூ.ஏ.என்.ஓ. என்ற அமைப்பை சேர்ந்த 14 நாடுகளின் விஞ்ஞானிகள் தற்போது கூடங்குளத்தில் முகாமிட்டுள்ளதாக அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

பாதுகாப்பு ஏற்பாடுகள், உற்பத்தி திறன், அணுஉலை செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கடந்த 18-ம் தேதியில் இருந்து இவர்கள் ஆய்வு செய்து வருகிறார் கள். இந்த ஆய்வு வரும் 25-ம் தேதிவரை நடைபெறு கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x