ராமநாத சுவாமி கோயில் நிர்வாகத்தை கண்டித்து ராமேசுவரத்தில் ஆலய பிரவேச போராட்டம்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் முன் நேற்று நடைபெற்ற ஆலய பிரவேசப் போராட்டத்தில் பங்கேற்றோர்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் முன் நேற்று நடைபெற்ற ஆலய பிரவேசப் போராட்டத்தில் பங்கேற்றோர்.
Updated on
1 min read

ராமேசுவரம்: ​ராம​நாத சுவாமி கோயில் நிர்​வாகத்தை கண்​டித்து நேற்று ஆலயப் பிர​வேசப் போராட்​டம் நடை​பெற்​றது. ராமேசுவரம் ராம​நாத சுவாமி கோயி​லில் உள்​ளூர் மக்​கள் சிறப்பு தரிசன வழி​யில் கட்​ட​ணமின்றி சுவாமியை தரிசித்து வருகின்றனர். ஆனால், சமீபத்​தில் பொறுப்பேற்ற இணை ஆணை​யர், உள்​ளூர் மக்​கள் ரூ.200 கட்டண சிறப்பு தரிசன வழி​யில் வரு​வதற்கு கட்​ட​ணம் செலுத்த வேண்​டும் என்று கட்​டாயப்​படுத்தி வரு​கிறார்.

இதனால், உள்​ளூர் பக்​தர்​களுக்​கும், கோயில் நிர்​வாகத்​தினருக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், உள்​ளூர் பக்​தர்​கள் கட்​ட​ணமின்றி மூல​வரை தரிசனம் செய்ய அனு​ம​திக்​கக் கோரி​யும், ராம​நாத சுவாமி கோயில் நிர்​வாகத்​தைக் கண்​டித்​தும், மக்​கள் நலப் பேரவை சார்​பில் ஆலயப் பிர​வேசப் போராட்​டம் நடத்​தப்​போவ​தாக அறி​வித்​தனர்.

அதைத்தொடர்ந்து ராமேசுவரம் வட்​டாட்​சி​யர் அலுவல​கத்​திலும், ராம​நாத​புரம் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​திலும் நடை​பெற்ற சமா​தானப் பேச்​சு​வார்த்தையில் தீர்​வு​காணப்​பட​வில்​லை. இந்​நிலை​யில், ராம​நாத சுவாமி கோயில் நிர்​வாகத்தை கண்​டித்து ராமேசுவரத்​தில் நேற்று ஆலயப் பிர​வேசப் போராட்​டம் நடை​பெற்​றது.

மக்​கள் பாது​காப்பு பேர​வையைச் சேர்ந்த செந்​தில்​வேல், பிர​பாகரன் ஆகியோர் போராட்​டத்தை ஒருங்​கிணைத்​தனர். போராட்​டத்​தில் ஈடு​பட்ட 45 பெண்​கள் உட்பட 150 பேரை போலீ​ஸார் கைது செய்​து, தனி​யார் மண்​டபத்​தில் அடைத்​தனர். மாலை​யில் அனை​வரும்​ விடுவிக்​கப்​பட்​டனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in