Published : 26 Jul 2018 10:06 AM
Last Updated : 26 Jul 2018 10:06 AM

தொழில் நஷ்டத்தை சமாளிக்க பெற்றோரிடம் கூடுதல் கட்டணம் கேட்ட தனியார் பள்ளி தாளாளர், நிர்வாகிகள் கைது: 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க மாணவர்களின் பெற்றோர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டு கட்டாயப்படுத்திய பள்ளி தாளாளர், நிர்வாகிகள் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை குரோம்பேட்டை, பெருங்களத்தூர் பகுதிகளில் ஸ்ரீமதி சுந்தரவள்ளி நினைவு (எஸ்எஸ்எம்) சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளின் தாளாளராக இருப்பவர் சந்தானம். இவர், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரிடம், ‘அடுத்த கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணம் ரூ.2 லட்சம். இதை இந்த ஆண்டே கட்ட வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தியுள்ளார். திடீரென ரூ.2 லட்சத்தை முன் வைப்புத் தொகையாக கேட்டதால் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். மேலும், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ரூ.2 லட்சத்தை கட்ட முடியாது என திட்டவட்டமாக தெரி வித்த பெற்றோர், இதுதொடர்பாக சிட்லப்பாக்கம், பீர்க்கன்காரணை காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிட மும் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்தி நட வடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் காலை பள்ளியில் நடந்த வழிபாட்டுக் கூட்டத்தின்போது, ‘பணம் கட்ட கையாலாகாதவர்கள்’ என மாணவர்களின் பெற்றோரை சந்தானம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர். நேற்று காலை பள்ளியை மீண்டும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

உடனே, பள்ளிக்கு வெளியே தயாராக நின்றிருந்த போலீஸார், விரைந்து சென்று இருதரப் பினரையும் சமாதானம் செய்தனர். போலீஸார் வந்ததை அறிந்த சந்தானம், பள்ளியின் பின் பக்க வழியாக காரில் சென்றுவிட்டார்.

இதையடுத்து, போலீஸாரும் மற்றொரு காரில் துரத்திச் சென்று சந்தானத்தின் காரை வழிமறித் தனர். அவரைப் பிடித்து பீர்க்கன் காரணை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். தீவிர விசாரணைக்குப் பிறகு, அவரை கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெற்றோர் கூறும்போது, ‘‘சந்தானம் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இதில் பல கோடி ரூபாயை இழந்துவிட்டார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க மாணவர்களின் பெற் றோரிடம் இருந்து கூடுதல் கட்ட ணம் வசூலித்து ரூ.200 கோடி திரட்ட திட்டமிட்டு இருந்தார். ஆண்டுக் கட்டணம் ரூ.1 லட்சம் என்று இருந்ததை ரூ.2 லட்சமாக உயர்த்தி, அதையும் முன் கூட்டியே கட்டச்சொல்லி கட்டாயப் படுத்தியதால்தான் போராட்டத்தில் ஈடுபட்டோம்” என்றனர்.

இது தொடர்பாக காவல் துணை ஆணையர் முத்துசாமி கூறும்போது, ‘‘பள்ளி தாளாளர் சந்தானம், நிர்வாகிகள் செல்வ குமார், கார்த்திகேயன், ராகவன், ரங்கநாதன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேரும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ‘‘என் இஷ்டத்துக்குதான் பணம் வசூலிப்பேன். நான் அப்படித்தான் திட்டுவேன்’’ என்று போலீஸிடமே சந்தானம் கூறுகிறார். பெற்றோரை திட்டியதை அவரே ஒப்புக்கொண் டார்’’ என்றார்.

‘‘பெற்றோர், மாணவர்களை மிரட்டியது, போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, குழந்தைகளை மனஅழுத்தத் துக்கு உள்ளாக்குவது, ஆபாச வார்த்தைகளால் திட்டுவது, அதிக கல்விக் கட்டணம் கேட்பது உட்பட 11 பிரிவுகளின் கீழ் சந்தானம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றும் துணை ஆணையர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x