100-வது வயதை எட்டிய காந்திய போராளி கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

100-வது வயதை எட்டிய காந்திய போராளி கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
Updated on
1 min read

சென்னை: நூறாவது வயதில் அடி​யெடுத்து வைத்​திருக்​கும் காந்​திய போராளி கிருஷ்ணம்​மாள் ஜெக​நாதனுக்கு மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்​ஹாசன் வாழ்த்து தெரி​வித்​துள்​ளார். தாழ்த்​தப்​பட்ட மக்​களின் நலனுக்​காக தன் வாழ்க்​கையை அர்ப்​பணித்​தவரும், காந்​திய போராளி​யு​மான கிருஷ்ணம்​மாள் ஜெக​நாதன் நேற்று 100-வது வயதில் அடி​யெடுத்து வைத்​தார். இதை யொட்டி அவருக்கு மநீம தலை​வர் கமல்​ஹாசன் பிறந்​த​நாள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக சமூக வலைதளத்​தில் கமல்​ ஹாசன் நேற்று வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: காந்​தி​யம் என்​னும் கருத்​தாக்​கத்​துக்கு உரு​வ​மாய் இன்று நம் கண்​முன் நிற்​கும் பெருந்​தகை​யாளர் கிருஷ்ணம்​மாள் ஜெக​நாதன். சட்​டரீ​தி​யான போராட்​டங்​களால், செயல்​பாடு​களால் லட்​சக்​கணக்​கான எளிய மக்​களுக்கு வாழ்​வா​தா​ரம் பெற்​றுத் தந்த காந்​தி​யர்.

வாழ்​வு, சேவை என்​பவை இருவேறு விஷ​யங்​கள் என்​றில்​லாமல், வாழ்வே சேவை என்று வாழும் அம்​மை​யார் கிருஷ்ணம்​மாளின் வயதில் ஜூன் 16 (நேற்​று) நூறாவது ஆண்டு தொடங்​கு​கிறது. அவரை வணங்கி வாழ்த்​து​வது என் கடமை. ‘இன்​னு​மொரு நூற்​றாண்டு இரும்’ என்​னும் சம்​பிர​தாய வாழ்த்​துச் சொல் இவருக்கே பொருந்​தும். வாழ்க பல்​லாண்​டு. இவ்​வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in