பிரான்ஸ், ஜெர்மனிக்கு அமைச்சர் அன்பரசன் பயணம் - தமிழ் அமைப்புகள் கவுரவிப்பு

அரசு முறைப் பயணமாக ஜெர்மனி சென்றுள்ள தமிழக குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு, ஃபிராங்பர்ட் தமிழ் சங்கத்தில் நடைபெற்ற விழாவில், ஜிஐபிஏ அமைப்பு சார்பில் `எம்எஸ்எம்இ நண்பன் விருது' வழங்கப்பட்டுள்ளது. நிகழ்வில், பிராங்க்பர்ட் தமிழ் சங்கத் தலைவர் பாலாஜி, இந்திய துணைத் தூதரகத்தின் கவுன்சில் ஜெனரல் பி.எஸ்.முபாரக் ஜிஐபிஏ சார்பில் பி.செல்வகுமார் மற்றும் க.நிர்மல் ராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

Updated on
1 min read

சென்னை: அரசு ​முறை பயண​மாக பிரான்ஸ் மற்​றும் ஜெர்​மனி சென்​றுள்ள அமைச்​சர் தா.மோ.அன்​பரசனுக்​கு, அங்​குள்ள தமிழ் அமைப்​பு​கள் சார்​பில், ‘எம்​எஸ்​எம்இ நண்​பன் மற்​றும் சாதனை​யாளர்’ விருதுகள் வழங்கி கவுரவிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழக குறு, சிறு, நடுத்​தரத் தொழில்​கள் துறை அமைச்​சர் தா.மோ.அன்​பரசன் அரசு முறைப் பயண​மாக, ஜெர்​மனி, பிரான்ஸ் உள்​ளிட்ட நாடு​களுக்கு பயணம் மேற்​கொண்​டுள்​ளார்.

முதலில் நேற்று முன்​தினம் பிரான்ஸ் சென்ற அவர், பாரிஸில் நடை​பெறும் புத்​தாக்க கருத்​தரங்​கில் பங்​கேற்​றார். அப்​போது, பிரான்​சில் உள்ள இந்​திய வம்​சாவளி​யினரின் சர்​வ​தேச அமைப்பு (ஜிஓபிஐஓ) சார்​பில், ‘எம்​எஸ்​எம்இ சாதனை​யாளர் விருது’ வழங்​கப்​பட்​டது. விருதை ஜிஓபிஐஓ அமைப்​பின் தலை​வர் ராஜா​ராம் வழங்​கி​னார்.

சிறப்பான பணி: அப்​போது அவர் பேசும்​ போது, “தமிழகத்​தின் குறு, சிறு, நடுத்​தரத் தொழில்​கள் துறை​யின் வளர்ச்​சிக்கு சிறப்​பாக பணி​யாற்​றியதற்​காக இந்த விருது வழங்​கப்​படு​கிறது” என தெரி​வித்​தார். இதையடுத்து நேற்று அமைச்​சர் அன்​பரசன், ஜெர்​மனி சென்​றார்.

ஜெர்​மனி​யின் பிராங்க்​பர்ட்​டில், விளை​யாட்டு தொடர்​பான புத்​தாக்க நிறு​வனம் தொடர்​பான சந்​திப்​பில் பங்​கேற்​ப​தற்கு முன்​ன​தாக அவர் அங்​குள்ள பிராங்க்​பர்ட் தமிழ்ச்​சங்க விழா​வில் பங்​கேற்​றார். அங்கு அமைச்​சருக்​கு, ஜிஐபிஏ அமைப்பு சார்​பில் ‘எம்​எஸ்​எம்இ நண்​பன் விருது’ வழங்​கப்​பட்​டது.

நிகழ்​வில், பிராங்க்​பர்ட் தமிழ் சங்​கத் தலை​வர் பாலாஜி, இந்​திய துணைத் தூதரகத்​தின் கவுன்​சில் ஜெனரல் பி.எஸ்​.​மு​பாரக் ஜிஐபிஏ சார்​பில் பி.செல்​வகு​மார் மற்​றும் க.நிர்​மல்​ராமன் ஆகியோர் பங்​கேற்​றனர். அமைச்​சர் அன்​பரசனுடன், ஸ்டார்ட்​-அப் தமிழ்​நாடு நிறு​வனத்​தின் இயக்​குநர் சிவ​ராஜா ராம​நாதன், தென்​னிந்​திய தொழில் வர்த்தக சபை மற்​றும் புத்​தாக்க நிறு​வனங்​களைச் சேர்ந்​தவர்​கள்​ உடனிருந்​தனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in