பாஜக கூட்டணிக்கு விஜய் வரமாட்டார்: ராம.சீனிவாசன் கருத்து

பாஜக கூட்டணிக்கு விஜய் வரமாட்டார்: ராம.சீனிவாசன் கருத்து
Updated on
1 min read

திண்டுக்கல்: தவெக தலைவர் விஜய் பாஜக கூட்டணிக்கு வர மாட்டார் என்று பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கூறினார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக, தேமுதிக, அமமுக மற்றும் சிறிய கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும். திருமாவளவனுக்கு கிடைக்கும் வாக்குகளில் பாதியை விஜய் எடுத்துச் சென்று விடுவார். அதேபோல, கணிசமான சிறுபான்மையினர் வாக்குகள் விஜய்க்குச் சென்றுவிடும் என்று திமுகவினர் அச்சப்படுகின்றனர்.

பாஜக கூட்டணிக்கு விஜய் வர மாட்டார். ஒரு நடிகர் கட்சி தொடங்கி உடனடியாக கூட்டணி என்று கூறினால், அவரது கட்சி காலியாகிவிடும். சிரஞ்சீவி, விஜயகாந்த் போன்றோர் முதலில் தனித்தே தேர்தலை சந்தித்தனர்.

விஜய் முதல்வராக வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். இச்சூழலில், பழனிசாமியை முதல்வராக்குவோம் என்று விஜய் பிரச்சாரம் செய்தால், அவரது கட்சி காலியாகிவடும். கூட்டணி இல்லாமல் இருந்தால்தான் விஜய் வாக்குகள் பெறுவார். கூட்டணியில் சேர்ந்தால் அவர் வாக்குகளைப் பெற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க கண்காட்சி குள்ளனம்பட்டியில் நேற்று நடைபெற்றது. கண்காட்சியை மாநிலப் பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் திறந்துவைத்து, நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in