இன்று குரூப்-1 முதல்நிலை தேர்வு

இன்று குரூப்-1 முதல்நிலை தேர்வு
Updated on
1 min read

சென்னை: துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கும், உதவி வனப் பாதுகாவலர் பணிக்கும் பொதுவான குரூப்-1 மற்றும் குரூப்-1 ஏ முதல்நிலைத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. ஏறத்தாழ 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: குரூப்-1 பதவிகளில் 70 காலியிடங்களையும் குரூப்-1ஏ பதவியில் (உதவி வனப் பாதுகாவலர்) பதவியில் 2 காலியிடங்களையும் நிரப்பும் வகையில் குரூப்-1 மற்றும் குரூப்-1 ஏ பொது முதல்நிலைத் தேர்வு ஜூன் 15-ம் தேதி (இன்று) நடைபெறுகிறது.

மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் தேர்வெழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 44 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 987 தலைமை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 170 இடங்களில் 41,094 பேர் தேர்வெழுதுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in