ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்: ஆசிரியர் மன்றம் அறிவிப்பு

ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்: ஆசிரியர் மன்றம் அறிவிப்பு
Updated on
1 min read

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், தமிழக அரசை எதிர்த்து ஒருங்கிணைந்த போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவித்துள்ளது.

அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 75 சதவீத கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூறப்படுகிறது. மீதமுள்ள 25 சதவீதத்தில் ஆசிரியர்களுக்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம், ஓய்வூதிய பங்களிப்புத் திட்டம் ரத்து போன்ற கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110-வது விதியில் முதல்வர் அறிக்கையில், இந்தக் கோரிக்கை நிறைவேறும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். கோரிக்கைகளை நிறைவேற்றுவது தாமதமானால், அனைத்து இயக்கங்களையும் திரட்டி ஒருங்கிணைந்த போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in