சென்னை ராமாபுரம் அருகே மெட்ரோ கட்டுமானம் சரிந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு

சென்னை ராமாபுரம் அருகே மெட்ரோ கட்டுமானம் சரிந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் உயர்மட்டப்பாதை பணியின்போது, இணைப்பு பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். மேலும், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் நடைபெறுகிறது. இவற்றில் மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடம் (44.6 கி.மீ.) ஆகும். இத்தடத்தில் போரூர் முதல் சென்னை வர்த்தகம் மையம் இடையே பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

இந்நிலையில்,இத்தடத்தில் ராமாபுரம் அருகே உயர்மட்டபாதையில் வியாழக்கிழமை இரவு இணைப்பு பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சரிந்த விழுந்த இணைப்பு பாலத்தை அகற்றும் பணி நடைபெறுகிறது. சம்பவ இடத்துக்கு மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in